ஆண்கள் பிரிவில் இந்தியா சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது பெண்கள் பிரிவில் முதல் தடவையாக கென்யா சம்பியனானது

0 106

(எம்.எம்.சில்­வெஸ்டர்)

இந்­தி­யாவின் சென்­னையில் நடை­பெற்ற 5ஆவது ரோல் போல் உலகக் கிண்ணப் போட்­டி­களில் ஆண்கள் பிரிவில் இந்­தி­யாவும், பெண்கள் பிரிவில் கென்­யாவும் உலக சம்­பி­ய­னா­கின.

ஐ.சி.எப். உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் கடந்த 15 ஆம் திகதி முதல் நடை­பெற்று வந்த 5 ஆவது ரோல் போல் உலகக் கிண்ண போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் 28 நாடு­களும், பெண்கள் பிரிவில் 17 நாடு­களும் பங்­கு­பற்­றின.

இந்த சுற்றுப் போட்­டியில் தோல்­வி­ய­டை­யாத அணி­க­ளாக வலம்­வந்த இந்­தியா மற்றும் கென்யா அணிகள் இறுதிப் போட்­டியில் மிகவும் ஆக்­ரோ­மாக விளை­யா­டி­யன. விறு­வி­றுப்­பாக நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் இந்­தியா 9 — 3 என்ற கோல்கள் கணக்கில் வென்று தொடர்ச்­சி­யான 4ஆவது தட­வை­யாக உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

பெண்கள் பிரிவில் இந்­தி­யாவை வீழ்த்­தி­யது கென்யாபெண்கள் பிரிவில் தத்தம் குழுக்­களில் முத­லி­டங்­களைப் பெற்ற இந்தியா­வுக்கும் கென்­யா­வுக்கும் இடை­யி­லான இறுதிப் போட்டி மிகவும் பர­ப­ரப்­பாக நடை­பெற்­றது.

மூன்­றா­வது தடவையாக உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரிக்கும் கங்­க­ணத்­துடன் இந்­தி­யாவும் முதல் தடவையாக உலகக் கிண்­ணத்தை வென்­றெ­டுக்கும் முயற்­சி­யுடன் கென்­யாவும் இறுதிப் போட்­டியில் கடு­மை­யாக மோதிய வண்ணம் இருந்­தன.
இடை­வே­ளை­யின்­போது இரண்டு அணி­களும் தலா ஒரு கோல் போட்­டி­ருந்­தன.

இரண்­டா­வது பகு­தியில் இரண்டு அணி­களும் வெற்றி கோலைப் போடு­வ­தற்கு கடும் பிர­யத்­தனம் எடுத்­துக்­கொண்­டன. ஆனால் அதிர்ஷ்டம் கென்­யா­வுக்கு கைகொ­டுக்க, அவ்­வணி 2 — 1 கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று உலக சம்பியனா­னது.

ஆண்கள் பிரிவில் மூன்­றா­வது இடத்தை பங்­க­ளா­தேஷும், பெண்கள் பிரிவில் மூன்றாவது இடத்தை எகிப்தும் பெற்றன.
இந்த இரண்டு பிரிவுகளிலும் பங்குபற்றிய இலங்கை அணிகள் கால் இறுதிகளுடன் வெளியேறியிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!