கைத்தொலைபேசியைத் திருடிய நபரைப் பிடித்து விசாரித்தபோது அணிந்திருந்த தொப்பிக்குள்ளிருந்து ஹெரோயின் மீட்பு!

0 105

(கம்­பளை நிருபர்)

ஒரு­வரின் 50,000 ரூபா பெறு­ம­தி­யான கைத்­தொ­லை­பே­சியை திரு­டிய நபரை பொலிஸார் பிடித்து சோதனை செய்­த­போது நபர் அணிந்­தி­ருந்த தொப்­பிக்குள் சூட்­சு­ம­மான முறையில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்தஹெரோயின் பக்­கெட்­டுக்­களை கலஹா பொலிஸார் கைப்­பற்­றினர். கலஹா தெல்­தோட்டை நாராங்­ஹின்ன பிர­தே­சத்தில் இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

வெளி­நாடு ஒன்றில் பணி­யாற்றி விட்டு சில தினங்­க­ளுக்கு முன்னர் நாடு திரும்­பி­யி­ருந்த முறைப்­பாட்­டாளர், சம்­ப­வ­தி­ன­மான புதன்­கி­ழமை தனது 50,000 ரூபா பெறு­ம­தி­யான கைத் தொலை­பே­சியை தனது அலு­மா­ரியின் மேல் வைத்து விட்டு குளிக்கச் சென்ற சம­யமே சந்­தேக நபர் திரு­டி­யுள்ளார்

திரு­டிய தொலை­பே­சி­யினை இரண்­டா­யிரம் ரூபா­விற்கு விற்­பனை செய்து அந்த பணத்தில் ஹெரோயின் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!