எஸ்.எல்.சி.யும் எஸ்.எல்.ரி.யும் கூட்டிணைந்து புதிய மைதானம் ஒன்றை நிர்மாணிக்கவுள்ளன

0 44

பாதுக்­கவில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னமும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறு­வ­னமும் கைச்­சாத்­திட்­டுள்­ளன.

பாதுக்­கவில் இயங்­கி­வரும் ஸ்ரீலங்கா டெலிகொம் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு சொந்­த­மான 36 ஏக்கர் காணியில் இந்த மைதானம் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் மைதா­னத்தின் ஆரம்பக் கட்­ட­வே­லை­களை ஸ்ரீலங்கா டெலிகொம் தொடங்­கு­வ­துடன் கிரிக்கெட் மைதானம் உட்­பட ஏனைய வச­தி­க­ளுக்­கான நிர்­மாணப் பணி­களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் பொறுப்­பேற்கும்.

இந்த மைதா­னத்தின் மத்­தியில் 5 புற்­தரை (டேர்வ்) ஆடு­க­ளங்கள், நவீன விளை­யாட்­ட­ரங்கம், வீரர்கள் உடை­மாற்று அறைகள், மைதான எல்­லையில் பயிற்­சிக்­கான ஆடு­க­ளங்கள், ஏனைய வச­திகள், வடிகான் வச­திகள் ஆகி­ய­வற்றை நிர்­மா­ணிக்கும் பொறுப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் ஏற்கும்.

நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள இந்த மைதா­னத்தின் நிர்­மாண செயற்­பா­டு­களைக் கவ­னிக்­க­வென ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னமும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறு­வ­னமும் முகா­மைத்­துவக் குழு ஒன்றை நிய­மிக்கும்.

மாகாண மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்­டிகள், இலங்­கைக்கு வரு­கை­தரும் வெளி­நாட்டு வளர்ந்து ­வரும் வீரர்கள் அணி­க­ளு­ட­னான போட்­டிகள் இந்த மைதா­னத்தில் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற விசேட வைப­வத்­தின்­போது இந்த மைதா­னத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் கௌரவ பொதுச் செய­லாளர் மொஹான் டி சில்வா, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறு­வனத் தலைவர் குமா­ர­சிங்க சிறி­சேன ஆகியோர் கைச்­சாத்­திட்­டனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் உதவித் தலைவர் ரவின் விக்­ர­ம­ரட்ன, ஸ்ரீலங்கா டெலிகொம் பல்­க­லைக்­க­ழக பிர­தம நிறை­வேற்று அதி­காரி ரஞ்சித் ரூப­சிங்க, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறு­வ­னத்தின் சட்டப் பிரிவு தலைமை அதிகாரி மிரான் பெர்னாண்டோ, நிதிப் பிரிவு தலைமை அதிகாரி மஹேஷ் சில்வா ஆகியோரும் உடன்படிக்கை கைச்சாத்திடல் வைபவத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!