பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற சிலாபம் பதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கைது!

0 1,171

                                                                                                                                    (எம்.எப்.எம்.பஸீர்)

சிலாபம், முன்னேஸ்வரம் பகுதியில் தேவாலயம் ஒன்றை நடத்தி வந்த பெண் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிலாபம் பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று (22) மாலை கைது செய்யப்பட்டார்.

இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரி அதில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை, குறித்த தேவாலயத்துக்குள் வைத்து பெற்றுக்கொள்ளும்போது அவரைக் கைது செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் விசாரணைப் பிரிவு பனிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்ரசிறி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!