மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீழ்ந்த மதுபான போத்தல்கள்!

0 950

                                                    (மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்)
மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றிலிருந்து 100க்கும் மேற்பட்ட மதுபான போத்தல் கொண்ட பெட்டிகள் வீதியில் வீழந்தமையால் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

இச்சம்பவம் மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று (22) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கனரக வாகனத்திலிருந்த 12 பெட்டிகளில் காணப்பட்ட மதுபான போத்தல்கள் வீதியில் வீழ்ந்து உடைந்துள்ளன.
அஇவ்வாறு உடைந்த மதுபான போத்தல்களை கனரக வாகன சாரதி மற்றும் உதவியாளருடன் பிரதேச மக்களும் இணைந்து அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்தை வழமைக்கும் திரும்பியது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!