இசை நிகழ்ச்சி தாமதிக்கப்பட்டதால் மடோனாவுக்கு எதிராக ரசிகர் வழக்கு!

ஆரோக்கியத்துக்காக தனது சிறுநீரை அருந்துவதாகக் கூறுகிறார் மடோனா

0 171

உலகப் புகழ்­பெற்ற அமெ­ரிக்கப் பாடகி மடோ­னாவின் இசை நிகழ்ச்­சி­யொன்று தாம­தப்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்கு எதி­ராக ரசிகர் ஒருவர் வழக்குத் தொடுத்­துள்ளார்.

பாடகி மடோனா தற்­போது மெடம் எக்ஸ் (Madame X,”) எனும் இசைச்­சுற்­று­லாவை நடத்தி வரு­கிறார்.

இச்­சுற்­று­லாவின் ஒரு நிகழ்ச்சி அடுத்த மாதம் 17 ம் திகதி அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்­தி­லுள்ள மியாமி நகரில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­கழ்ச்சி இரவு 8.30 மணிக்கு ஆரம்­ப­மாகும் என முன்னர் அறி­விக்ப்­பட்­டி­ருந்­தது.

எனினும் இரவு 10,30 மணிக்கே ஆரம்­ப­மாகும் என தற்­போது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­தீர்­மா­னத்­துக்கு எதி­ராக புளோ­ரி­டாவைச் சேர்ந்த ரசி­கர் ஒருவர் வழக்குத் தொடுத்­துள்ளார்.

இரவு 10.30 மணிக்கு தன்னால் இந்­நி­கழ்ச்­சியை பார்க்க முடி­யாது என நெட் ஹொலண்­டனர் எனும் மேற்­படி ரசிகர் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­கழ்ச்­சிக்­காக 3 டிக்­கெட்­களை வாங்­கு­வ­தற்கு 1024 டொலர்­களை (சுமார் 183, 000 ரூபா) தான் செல­விட்­ட­தா­கவும், 10.30 மணிக்கு ஆரம்­ப­மாகும் நிகழ்ச்­சிக்­கான டிக்­கெட்டை மற்­ற­வர்­க­ளுக்கு மீள் விற்­பனை செய்­வ­தற்கும் தான் சிர­மப்­ப­டு­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

டிக்கெட் விற்­பனை செய்­யப்­பட்ட பின்னர் நிகழ்ச்சி நேரத்தை மாற்­றி­யதன் மூலம் ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கும் ரசி­கர்­க­ளுக்­கு­மான ஒப்­பந்தம் மீறப்­பட்­டுள்­ள­தாக என நெட் ஹொலண்­டனர் தெரி­வித்­துள்ளார்.

வேறு சில ரசி­கர்­க­ளுடன் இணைந்து மடோ­னா­விடம் நஷ்ட ஈடு பெறு­வ­தற்குத் தான் திட்­ட­மிட்­டுள்­ள­தாவும் அவர் கூறி­யுள்ளார்.

  ஆனால், அண்­மையில் லாஸ் வேகாஸ் நகரில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யொன்­றின்­போது, இந்த குற்­றச்­சாட்டு குறித்து மடோனா கருத்துத் தெரி­விக்­கையில், தான் ஒரு­போதும் நிகழ்ச்­சிக்கு தாம­த­மாக செல்­வ­தில்லை எனக் கூறி­யுள்ளார்.

இதே­வேளை, 61 வய­தான மடோனா, இசைச்­சுற்­று­லா­வின்­போது தனது உடலை பரா­ம­ரிப்­ப­தற்­காக அதி­காலை 3 மணிக்கு குளிர்­நீரில் தான் குளித்த­தாக தெரி­வித்­துள்ளார். 

அத்­துடன் குளிர்­நீரில் குளித்த பின்னர் ஆரோக்­கி­யத்­துக்­காக தனது சிறு­நீரை தான் குடித்­த­தா­கவும் மடோனா தெரி­வித்­துள்ளார்.

மடோனா வெளி­யிட்ட வீடி­யோ­வொன்றில் இத்­த­க­வல்­களை அவர் தெர­வித்­துள்­ளமை  குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!