குறுந்திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாருக் கானின் மகள் சுஹானா கான் (வீடியோ)

The Grey Part of Blue | a short film (2019)

0 264

நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கான், குறுந்­தி­ரைப்­படம் ஒன்றின் மூலம் நடி­கை­யாக அறி­மு­க­மா­கி­யுள்ளார்.

‘தி கிறே பார்ட் ஒவ் புளூ’ குறுந்­தி­ரைப்­ப­டத்தில்…

 

‘தி கிறே பார்ட் ஒவ் புளூ’ (The gray part of blue) எனும் குறுந்­தி­ரைப்­ப­டத்தில் சுஹானா கான் நடித்­துள்ளார். 10 நிமி­டங்கள் ஓடும் குறுந்­தி­ரைப்­படம் இது.

ஷாருக்கானுடன் மகள் சுஹானாகான்

 

இப்­ப­டத்தை தியோடர் கிமேனோ இயக்­கி­யுள்ளார். சுஹா­னா­வுடன் ரொபின் கொனேல்லா இப்­ப­டத்தில் நடித்­துள்ளார்.

இப்­ப­டத்தை யூரி­யூப்பில் வெளி­யிட்ட இயக்­குநர் தியோடர் கிமேனோ, மிகத் திற­மை­யான நபர்­க­ளுடன் இக்­கு­றுந்­தி­ரைப்­ப­டத்தில் தான் பணி­யாற்­றி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.

கௌரிகானுடன் மகள் சுஹானாகான்

 

இக்­கு­றுந்­தி­ரைப்­ப­டத்தை பார்த்த பலரும் சுஹானா கானின் நடிப்பை பாராட்­டி­யுள்ளார்.  19 வய­தான சுஹானா கான், நடிகர் ஷாருக் கான் மற்றும் சினிமா தயா­ரிப்­பா­ளரும் பெஷன் டிஷை­ன­ரு­மான கௌரி கான் தம்­ப­தியின் ஒரே மகள் ஆவார்.

1991 ஆம் ஆண்டு ஷாருக் கானும் கௌரி கானும் திரு­மணம் செய்­தனர். இத்­தம்­ப­தியின் மகன் ஆர்யன் 1997 ஆம் ஆண்டு பிறந்தார். தி லயன் கிங் எனும் ஹொலிவூட் திரைப்­ப­டத்தின் ஹிந்திப் பதிப்பில் சிம்பா எனும் சிங்­கத்­துக்கு அவர் குரல் கொடுத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

‘தி கிறே பார்ட் ஒவ் புளூ’ குறுந்­தி­ரைப்­ப­டத்தில்…

2000 ஆம் ஆண்டு பிறந்த சுஹானா கான், லண்­ட­னி­லுள்ள ஆர்­டிங்லி கல்­லூ­ரியில் அண்­மையில் பட்டம் பெற்றவர்.அவர் விரைவில் பொலிவூட் நடிகையாக அறிமுகமாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Grey Part of Blue – short film (2019) Video: 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!