சாக்ஷி அகர்வாலை குளிக்க வைத்த யானை (வீடியோ)

0 673

பிக்பொஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சாக்ஷி அகர்வாலை யானையொன்று குளிக்க வைத்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஆச்சரியத்தக்க வகையில் ஒரு சில படங்களில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

சின்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் டெடி ஆகிய படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வால் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல நிறுவனத்தின் கலண்டர் மொடலாக சாக்சி அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி அதன் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தபோது அதில் கலந்து கொண்டார். இந்த படப்பிடிப்பின் போது ஒரு யானை மேல் சாக்ஷி அகர்வால் உட்கார்ந்திருக்கும் வகையில் படமாக்கப்பட்டது.

அந்த யானை தண்ணீரை உறிஞ்சி சாக்சி அகர்வால் மீது தெளிப்பது போலவும், அதில் சாக்ஷி அகர்வால் குளிப்பது போன்றும் அந்த விளம்பரப் படம் படமாக்கப்பட்டது. இது குறித்த வீடியோவை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!