அயோத்தி வழக்கு தொடர்பான படத்துடன் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த கங்கணா

0 152

நடிகை கங்­கணா ரணவத் சொந்­த­மாகத் தயா­ரிப்பு நிறு­வ­னத்தைத் தொடங்­கி­யுள்ளார். இதில் முதல் படம் அயோத்­தியில் ராஜ­ஜென்ம பூமி வழக்கு தொடர்­பா­ன­தாகும்.

பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காகத் தொடர்ந்து செய்­தி­களில் வலம் வரும் ஒரு பிர­பலம் நடிகை கங்­கணா ரணவத்.

தற்­போது இவர் தயா­ரிப்பு நிறு­வ­னத்தைத் தொடங்­கி­யுள்ளார்.

இதில் முதல் படத்­துக்கு அப­ரா­ஜிதா அயோத்யா என்று தலைப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நீண்ட கால­மாக நடை­பெற்று வந்த அயோத்­தி ராமர் கோயில் வழக்கு பற்­றிய படம் இது.

அடுத்த வருடம் தொடங்­க­வுள்ள இந்தப் படத்தின் திரைக்­க­தையை விஜே­யந்­திர பிரசாத் எழு­தி­யுள்ளார்.

இவர் பாகு­பலி இயக்­குநர் எஸ்.எஸ்.ராஜ­மௌ­லியின் தந்தை என்­ப­துடன் இவரே பாகு­பலி படங்­களின் கதை­யையும் எழு­தி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்தப் படம் பற்றி பேசிய கங்­கணா, ‘பல நூறு வரு­டங்­க­ளாக ராமர் கோயில் பற்றிப் பேசி வரு­கின்­றனர்.

80களில் பிறந்த ஒரு குழந்­தை­யாக, தொடர்ந்து அயோத்­தியா என்ற பெயரை நான் எதிர்­ம­றை­யான தன்­மையில் தான் கேட்டு வரு­கிறேன்.

ஒரு அரசன் பிறந்த ஒரு நிலப்­ப­குதி. அவன் தியா­கங்­களின் மறு­வ­டி­வ­மாக இருந்­தவன். சொத்துப் பிரச்­சி­னையில் மாட்­டிக்­கொள்­கிறான். இந்த வழக்கு இந்­திய அர­சி­யலின் அடை­யா­ளத்தை மாற்­றி­விட்­டது.

இந்த தீர்ப்பு பல நூறு வருடச் சர்ச்­சைக்கு முற்­றுப்­புள்ளி வைத்த அதே நேரத்தில் இந்­தி­யாவின் சமத்­துவ ஆன்­மா­வையும் காத்­துள்­ளது.

‘அபா­ர­ஜிதா அயோத்­தியா’ படம், நாயகன் எப்­படி கடவுள் நம்­பிக்கை இல்­லா­த­வ­னாக இருப்­ப­தி­லி­ருந்து கடவுள் நம்­பிக்கை பெறு­கிறான் என்ற பய­ணமே. ஒரு வகையில் இது என் தனிப்­பட்ட பயணத்தின் பிரதிபலிப்பும் கூட.

எனது முதல் தயாரிப்புக்கு இது சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன்’ என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!