வரலாற்றில் இன்று நவம்பர் 29: 1987 -தென்கொரிய விமானம் வெடித்துச் சிதறியதால் 115 பேர் பலி

0 46

1781: ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து அடி­மை­களை ஏற்­றிச்­சென்ற சொங் என்ற கப்பல் மாலு­மிகள் காப்­பு­றுதிப் பணத்­துக்­காக 133 ஆபி­ரிக்­கர்­களை கட­லுக்குள் எறிந்து கொன்­றனர்.

1947: பலஸ்தீனப் பிரிப்புக்கு ஐ.நா. பொதுச் சபை அங்கீகாரம் அளித்தது

1830: போலந்தில் ரஷ்­யாவின் ஆட்­சிக்­கெ­தி­ராக புரட்சி வெடித்­தது.

1855: துருக்­கியில் தாதியர் பயிற்­சிக்­காக புளோரன்ஸ் நைட்­டிங்கேல் நிதியம் நிறு­வப்­பட்­டது.

1877: தோமஸ் அல்வா எடிசன் போனோ­கிராஃப் என்ற ஒலிப்­ப­திவுக் கரு­வியை முதற்­த­ட­வை­யாகக் காட்­சிப்­ப­டுத்­தினார்.

1915: கலி­போர்­னி­யாவில் சாண்டா கட்­ட­லீனா தீவின் பல முக்­கிய கட்­ட­டங்கள் தீயில் எரிந்­தன.

1929: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ரிச்சர்ட் பயேர்ட், தென் முனை மேல் பறந்த முதல் மனி­த­ரானார்.

1945: யூகோஸ்­லா­விய சமஷ்டி மக்கள் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.

1947: எதிர்­கால பலஸ்­தீன அர­சுக்­காக பலஸ்­தீ­னத்தைப் பிரிப்­ப­தற்கு ஐ.நா. பொதுச்­சபை அங்­கீ­கா­ர­ம­ளித்­தது.

1950: வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படை­களை வட கொரி­யா­வி­லி­ருந்து வெளி­யே­றும்­படி செய்­தனர்.

1961: நாசாவின் மேர்க்­குரி – அட்லஸ் 5 விண்­கலம் சிம்­பன்சி ஒன்றை ஏற்­றிக்­கொண்டு விண்­ணுக்கு அனுப்­பப்­பட்­டது. இது பூமியை இரு தட­வைகள் சுற்­றி­வந்து புவேர்ட்டோ ரிக்­கோவில் இறங்­கி­யது).

1963: 118 பேருடன் சென்ற கன­டாவின் விமானம் மொன்ட்­ரி­யாலில் விபத்­துக்­குள்­ளா­கி­யது.

1963: அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோன்.எவ். கென்­னடி படு­கொலை தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்கு வொரன் ஆணைக்­கு­ழுவை ஜனா­தி­பதி லிண்டன் ஜோன்ஸன் நிய­மித்தார்.

1982: சோவியத் படை­களை ஆப்­கா­னிஸ்­தானில் இருந்து உட­ன­டி­யாக வில­கும்­படி சோவியத் ஒன்­றி­யத்தை ஐ.நா பொதுச் சபை வலி­யு­றுத்­தி­யது.

1987: தென்­கொ­ரிய விமானம் குண்­டு­வெ­டிப்­பினால் அந்­தமான் கட­லுக்கு மேலாக வெடித்துச் சித­றி­யதால் விமா­னத்­தி­லி­ருந்த 115 பேரும் உயி­ரி­ழந்­தனர்.

1990: ஈராக்­கி­லுள்ள வெளி­நாட்டுப் பணயக் கைதிகள் 15.01.1991 ஆம் திக­திக்குள் விடு­விக்­கப்­ப­டா­விட்டால் சர்­வ­தேச நட­வ­டிக்கை மேற்­கொள்­வது தொடர்­பாக ஐ.நா. பாது­காப்புச் சபை தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யது.

1987: தென்கொரிய விமானம் வெடித்துச் சிதறியதால் 115 பேர் பலி

2006: அணு­வா­யு­தங்­களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்­கு­களைத் தாக்­கக்­கூ­டிய ஷாகீன் 1 என்ற ஏவு­கணை சோத­னையை பாகிஸ்தான் வெற்­றி­க­ர­மாக நடத்­தி­யது.

2007: கரீ­பியன் பிராந்­தி­யத்தின் மார்ட்டினிக் கரையோரத்தில் 7.4 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.

2012: ஐ.நா.வில் பலஸ்தீனத்துக்கு அங்கத்துவமற்ற பார்வையாளர் அந்தஸ்து வழங்குவதற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபை வாக்களித்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!