13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா ஞாயிறன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்: இலங்கையிலிருந்து 650க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள்

0 665

(நெவில் அன்­தனி)

பங்­க­ளாதேஷ், பூட்டான், இந்­தியா, பாகிஸ்தான், மாலை­தீ­வுகள், இலங்கை, வர­வேற்பு நாட­னான நேபாளம் ஆகிய 7 நாடுகள் பங்­கு­பற்றும் தெற்­கா­சி­யாவின் ‘மினி ஒலிம்பிக்’ என வரு­ணிக்­கப்­படும் தெற்­கா­சிய விளை­யாட்டு விழா ஞாயி­றன்று (டிசம்பர் 1ஆம் திகதி) கோலா­கல வைபத்­துடன் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

தெற்­கா­சிய நாடு­களில் உள்ள விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களின் ஆற்­றல்­களை வெளிக்­கொ­ணரும் போட்­டி­யாக இது அமை­கின்­றது.

இப் போட்­டிகள் நேபா­ளத்தின் தலை­நகர் காத்­மண்­டு­விலும் காத்­மண்­டு­வி­லி­ருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பொக்­கா­ரா­விலும் டிசம்பர் 10ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

சம்­பி­ர­தா­ய­பூர்வ ஆரம்ப விழா நாளை­ம­று­தினம் நடை­பெ­ற­வுள்­ள­போ­திலும் கரந்­தாட்ட லீக் போட்­டிகள் கத்­மண்டு உள்­ளக அரங்கில் கடந்த புதன்­கி­ழமை ஆரம்­ப­மாகி இன்று நிறை­வு­பெ­று­வ­துடன் தொடர்ந்து இறுதிச் சுற்று நாளை­முதல் நடை­பெறும்

13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் 28 வகை­யான விளை­யாட்­டுக்­களில் 317 தங்கப் பதக்­கங்­க­ளுக்கு 7 நாடு­க­ளையும் சேர்ந்த சுமார் 5,000 வீர, வீராங்­க­னைகள் போட்­டி­யி­ட­வுள்­ளனர். தங்கப் பதக்­கங்­க­ளுடன் 317 வெள்ளிப் பதக்­கங்கள், 481 வெண்­கலப் பதக்­கங்­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

இலங்கையி­லி­ருந்து இம்முறை 27 வகை­யான விளை­யாட்­டுக்­களில் 650 க்கும் மேற்­பட்ட வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்­று­கின்­றனர். இப் போட்­டி­களில் 35க்கும் மேற்­பட்ட தங்கப் பதக்­கங்­களை வென்று ஒட்­டு­மொத்த நிலையில் இரண்டாம் இடத்தைப் பெறு­வ­தற்கு இலங்கை கடும் முயற்சி எடுக்­க­வுள்­ளது.

வில்­வித்தை, மெய்­வல்­லுநர், கூடைப்­பந்­தாட்டம், பட்­மின்டன், குத்­துச்­சண்டை, கிரிக்கெட் (ஆண்கள் மற்றும் பெண்கள்), சைக்­கி­ளோட்டம், வாட்போர், கால்­பந்­தாட்டம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), கோல்வ், கைப்­பந்து, ஜூடோ, கபடி, கராத்தே, கோ – கோ, பரக்­லைடிங், நீச்சல், குறி­பார்த்து சுடுதல், ஸ்கொஷ், மேசைப்­பந்­தாட்டம், டென்னிஸ், டய்க்­வொண்டோ, ட்ரைஎத்லன் (மூவம்ச நிகழ்ச்சி), கரப்­பந்­தாட்டம் மற்றும் கடற்­கரை கரப்­பந்­தாட்டம், பளு­தூக்கல், மல்­யுத்தம், வூஷு ஆகிய போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

இந்­தி­யாவின் குவா­ஹாட்­டியில் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இந்தியா (118 தங்கம், 90 வெள்ளி, 30 வெண்கலம்) முதாலம் இடத்தையும் இலங்கை (25 தங்கம், 63 வெள்ளி, 98 வெண்கலம்) இரண்டாம் இடத்தையும் பெற்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!