மத்திய கிழக்கு, வட ஆபிரிக்காவிலிருந்து புதிய அங்கத்தவரை தேடும் Now United உலகளாவிய இசைக்குழு

0 135

உல­க­ளா­விய இசைக்­கு­ழு­வான நௌ யுனைடெட் (Now United) புதிய அங்­கத்­தவர் ஒரு­வரை இணைப்­ப­தற்கு முயற்­சிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. மத்­திய கிழக்கு அல்­லது வட ஆபி­ரி­க்காவைச் சேர்ந்த கலைஞர் ஒரு­வரை இணைத்­துக்­கொள்ள தான் விரும்­பு­வ­தாக நௌ யுனைடெட் இசைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

  

நௌ யுனைடெட் ஆனது 2017 ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த இளம் பாட­கர்கள், பாட­கிகள் இக்­கு­ழுவில் அங்கம் வகிக்­கின்­றனர்.

தற்­போது அமெ­ரிக்கா, பிரிட்டன், இந்­தியா, பிரேஸில், பின்­லாந்து, பிலிப்பைன்ஸ், மெக்­ஸிகோ, தென் கொரியா, சீனா, செனகல், ஜப்பான், ரஷ்யா, ஜேர்­மனி, கனடா ஆகிய நாடு­களைச் சேர்ந்த 14 பேர் அங்­கத்­த­வர்­க­ளாக உள்­ளனர்.

பிரிட்­டனைத் தள­மாகக் கொண்ட ஸ்பேஸி கேர்ள்ஸ் இசைக்­கு­ழுவின் முகா­மை­யா­ள­ராக விளங்­கிய சைமன் ஃபுலர் நௌ யுனைடெட் இசைக்­கு­ழுவை 2017 ஆம் ஆண்டு ஆரம்­பித்தார். கடந்த மாதம் துபாயில் இக்­கு­ழு­வினர் நடத்­திய இசை நிகழ்ச்சிக்கு அதிக வர­வேற்பு கிடைத்­தது.

இந்­நி­லையில், இசைம ற்றும் நட­னத்தின் மீதான தமது ஆர்­வத்தை பகிர்ந்­து­கொள்­வ­தற்கும், தமது தனித்­து­வ­மான பின்­ன­ணியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தற்கும் விரும்பும் இளம் திறமையாளர்களை நௌ யுனைடெட் தேடுவதாக சைமன் ஃபுலர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!