திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் மீதான பாலியல் வழக்கில் நடிகை அனபெல்லா சாட்சியமளிக்க நீதிமன்றம் அனுமதி!

0 152

பாலியல் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டுள்ள ஹொலிவூட் திரைப்­படத் தயா­ரிப்­பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் தொடர்­பான வழக்கில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு நடிகை அன­பெல்லா சியோ­ரா­வுக்கு அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

நடிகை அனபெல்லா

 

67 வய­தான ஹார்வீ வைன்ஸ்டீன் ஹொலி­வூட்டின் மிகச் செல்­வாக்­கான திரைப்­படத் தயா­ரிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ராக விளங்­கி­யவர். அவர் தயா­ரித்த திரை­ப­்ப­டங்கள் ஏரா­ள­மான ஒஸ்கார் விரு­து­களை வென்­றுள்­ளன.

ஆனால், அண்­மைக்­கா­ல­மாக அவர் மீது ஹொலிவூட் நடி­கைகள் முதல் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்­ற­ச்­சாட்­டு­களை சுமத்தி வரு­கின்­றனர். பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் தம்மை வைன்ஸ்டீன் பாலியல் வல்­லு­ற­வுக்கும் பாலியல் தொந்­த­ர­வு­க­ளுக்கும் உட்­ப­டுத்­தினார் என நடி­கைகள் பலர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

ஹார்வீ வைன்ஸ்டீன்

இவற்றில் சில குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக நியூ யோர்க் பொலி­ஸாரால் ஹார்வீ வைன்ஸ்டீன் கைது செய்­யப்­பட்டு பின்னர் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்டார்.

ஹார்வீ வைன்ஸ்டீன் மீதான ஒரு வழக்கின் விசா­ரணை எதிர்­வரும் ஜன­வரி 6 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

ஹார்வீ வைன்ஸ்­டீ­னுக்கு எதி­ராக குற்றம் சுமத்­திய பெண்­களில் ஒருவர் 2013 ஆம் ஆண்டு தன்னை வைன்ஸ்டீன் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினார் எனத் தெரி­வித்­துள்ளார்.

மற்­றொரு பெண் 2006 ஆம் ஆண்டு வைன்ஸ்டீன் தன்னை பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தினார் எனத் தெரி­வித்­துள்ளார்.

ஹார்வீ வைன்ஸ்டீன் 1990களின் முற்­ப­கு­தியில் தன்னை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதாக கூறும் மற்­றொரு பெண்ணும் இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­யம­ளிப்­பதை தடுப்­ப­தற்கு வைன்ஸ்டீன் சட்­டத்­த­ர­ணிகள் முயற்­சித்­தனர்.

ஆனால், அவர்­களின் கோரிக்­கையை மன்­ஹெட்டன் உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி ஜேம்ஸ் புர்க்கே கடந்த செவ்வாய்கிழமை நிரா­க­ரித்­துள்ளார்.

நீதி­மன்ற ஆவ­ணங்­களில் 3 ஆவது பெண்ணின் பெயர் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஆனால், அவர் நடிகை அன­பெல்லா சியோரா தான் பர­வ­லாக கரு­தப்­ப­டு­வ­தாக ஏ.எவ்.பி. தெரி­வித்­துள்­ளது.

59 வய­தான நடிகை அன­பெல்லா, வல்­லு­ற­வுகள் மற்றும் பாலியல் தொந்­த­ர­வு­களால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் துணிச்­ச­லாக குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்கத் தூண்டும் #MeToo (#மீடூ) இயக்கம் 2017 ஒக்­டோ­பரில் எழுச்­சி­ய­டை­வ­தற்கு உத­வியவர்.

இவர் 1993 ஆம் ஆண்டு மன்ஹெட்டன் நகரிலுள்ள தனது வீட்டில் வைத்து தன்னை ஹார்வீ வைன்ஸ்டீன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் 2017 ஒக்டோபரில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!