விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை -ரெபா மோனிகா

0 130

கேரளத்து பெண் தான் ரெபா மோனிகா ஜான்.ஆனால் -படித்தது, வளர்ந்தது பெங்களூரில். மலையாளத்தில் வினித் சீனிவாசனின் ‘ஜேக்கப்பிண்ட ஸ்வராஜ்யம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஒரு சில மலையாளப் படங்களில் நடித்து விட்டு ‘ஜருகண்டி’ மூலம் தமிழுக்கு வந்தார்.

‘ஜருகண்டி’ படம் நல்ல வரவேற்பை பெறாததால் ரெபாவை தமிழ் ரசிகர்கள் கவனிக்கவில்லை.

அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ‘பிகில்’ படத்தில் திகில் கிளப்பி விட்டார்.

ஒரு தலைக் காதல் காரணமாக ஆசிட் வீசப்பட்டு முடங்கிக் கிடந்தவர், கோச் விஜய்யின் தன்னம்பிக்கை வார்த்தைகளால் மீண்டும் களமாடி வெற்றி காணும் அனிதாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

அவருடன் உரையாடியதிலிருந்து…

பொதுவாகவே மலையாள தேவதைகளின் பின்னணி சுவாரஸ்யமாக இருக்கும். உங்கள் பின்னணி எப்படி?
பூர்வீகம் கேரளா. அப்பாவின் பணி நிமித்தமாக பல ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூரில் செட்டிலாகிவிட்­டோம். சினிமா, நடிப்பு இவற்றையெல்­லாம் நா

ன் நினைத்துப் பார்த்ததே இல்லை. கெமிஸ்ட்ரி எனக்கு பிடித்த சப்ஜெக்ட்.

அதுல டாக்டரேட் வாங்கி ஒரு புரபசர் ஆகணுங்கிறதுதான் என்னோட கனவா இருந்திச்சி. திடீர்னு ஒரு நாள் வாழ்க்கை மாறுச்சு. அப்போ கன்னட டிவி ஒன்றில் ரியாலிட்டி ஷோ நடந்தது.  ஒரு ஜாலிக்காக அதுல பங்கெடுத்தேன்.

கடைசில நான்தான் டைட்டில் வின்னர்னு சொல்லிட்டாங்க. அப்புறம் பார்த்தா விளம்பரப் படத்துல நடிக்கிறீங்களான்னு வந்தாங்க. நடிச்சுதான் பார்ப்போமேன்னு நடிச்சேன்.

நிறைய விளம்பரங்களோட கன்னட சினிமா வாய்ப்பும் வந்தது.

நடிப்பு படிப்பை கெடுத்துடக்கூடாதுன்னு எதையும் ஒத்துக்காம படிப்பில் கவனம் செலுத்தினேன்.

என்னோட விளம்பரப் படம் ஒன்றை இயக்கிய டைரக்டர்தான் மலையாளத்துல ஒரு சூப்பர் சான்ஸ் வந்திருக்குன்னு ‘ஜேக்கப்பிண்ட ஸ்வராஜ்யம்’ படம் பற்றி சொன்னார்.

வினித் சீனிவாசன் பற்றி எனக்கு முன்பே தெரியும். அதனால அந்தப் படத்துல நடிக்க ஒப்புக்கிட்டேன்.

அந்தப் படம் வெற்றி பெறவும் நிறைய வாய்ப்புகள் வந்து பிசியாக நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

என்னோட மற்ற படங்களைப் பார்த்துட்டுதான் தமிழ்ல ‘ஜருகண்டி’ சான்ஸ் வந்தது.

ஆனால் நான் நினைச்ச மாதிரி தமிழ்ல எனக்கு ஸ்பேஸ் கிடைக்கல.

நானும் வேறு மொழி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். அப்புறம்தான் அட்லிகிட்டேருந்து ஒரு போன், ‘விஜய் சார்கூட நடிக்கிறீங்களா?’ன்னு. விஜய் சார் படம் என்றதுமே வேறெதும் கேட்காமல் ஒப்புக் கொண்டேன்.

ஷூட் ஆரம்பிக்கிற வரைக்கும் என்ன கெரக்டர்னு சொல்லவில்லை.திடீர்னு ஒரு நாள் 45 நாள் ஃபுட்பால் பயிற்சி இருக்கு வாங்கன்னு கூப்பிட்டாங்க.

அப்போதான் விஜய்சார் ஃபுட்பால் கோச்சுன்னும் நான் அவரோட டீம்ல விளையாடுற பொண்ணுங்கிறதும் தெரிஞ்சுது.அப்புறம் வீராங்கனைங்கிறதை தாண்டி இன்னொரு விஷயம் இருக்குன்னு சொன்னாங்க. முதல்ல ட்ரையினிங்கை முடிங்கன்னு சொன்னாங்க.

முடித்த பிறகுதான் அட்லீ சொன்னார், நீங்க ஆசிட் அட்டாக் பொண்ணா நடிக்கிறீங்கன்னு.

எனக்கு சின்ன ெஷாக், ‘படம் முடிந்த பிறகும் உங்க கெரக்டர்தான் ஆடியன்ஸ் மனசுல நிக்கும்’னு அட்லீ சொன்னார்.

அது இப்போ அப்படியே நடக்குறதைப் பார்த்து சந்தோஷமா இருக்கு.

ஆசிட் அட்டாக் பொண்ணுங்கள சந்திச்சீங்களா?
யாரையும் தனியா சந்திச்சதில்லை. கேரக்டர் பற்றி தெரிஞ்சதும் அது சம்பந்தமா நிறைய படிச்சேன். யூ டியூப்ல அவங்கள நிறைய பார்த்தேன்.அதன் பிறகுதான் நம்பிக்கையோட நடிச்சேன்.

ஆசிட் வீச்சு சம்பவங்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ஒரு பெண்ணின் அடையாளம், தன்னம்பிக்கை அவளோட முகம்தான்.

மற்றவர்களுக்கு எப்படியோ, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் முகம் அழகானதுதான். அதை சிதைக்கிற உரிமை யாருக்கும் இல்லை.

மோசமான மனநிலை உள்ளவர்களே இதுபோன்ற காரியத்தை செய்வார்கள்.

ஆசிட் வீசப்பட்ட பெண்கள் வாழ்நாள் முழுக்க தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

அந்த தண்டயை கொடுத்தவனை அதைவிட கடுமையாக தண்டிக்க வேண்டும்.

விளையாட்டில் ஆர்வம் உண்டா?
பள்ளி, கல்லூரி காலத்தில் நிறைய விளையாடி இருக்கேன்.

ஆனால் ஃபுட்பால் ஆடியதில்லை. அந்த விளையாட்டும் பிடிக்கவே பிடிக்காது.

பிகில் கமிட் ஆனதும் பிராக்டீஸ் பண்ணினபோதுதான் எத்தனை கடுமையான விளையாட்டு, இது ஏன் நமக்கு பிடிக்காமல் போனதுன்னு நினைத்தேன்.

இப்போது டி.வியில் கால்பந்து போட்டி வந்தால் மணிக்கணக்கில் உட்கார்ந்து பார்க்கிறேன்.

உங்களைப் போன்ற வளரும் ஹீரோயின்கள் விஜய் ஜோடியாக நடிக்கணும்னுதான் ஆசைப்படு வார்கள். நீங்கள் அவரது ஸ்டூடண்டா நடித்தது பற்றி?
விஜய் சாருக்கு ஜோடியாக நடிக்கணும்னுதான் எனக்கும் ஆசை.

அந்த நாளும் சீக்கிரம் வரும்னு நம்புறேன்.

அதுக்கு முன்னாடி அவர் படத்துல நான் நடிச்சதன் மூலம் அவரை நெருங்க முடிஞ்சுது, அவரோட பழக முடிஞ்சுது,

அவர் அட்வைஸ் கேட்க முடிஞ்சுது. நான் அவரோட ரசிகை. இதை அவர்கிட்டேயே சொல்லிட்டேன்.

இனி தமிழ்ப் படத்தில் அடிக்கடி பார்க்கலாமா?
கண்டிப்பாக. ஹரிஷ் கல்யாணோடு ‘தனுஷ் ராசி நேயர்களே’ படத்தில் நடிக்கிறேன்.

லவ் அண்ட் ரொமான்டிக் பிலிம். காலேஜ் ஸ்டூடன்ட் கெரக்டர்.

அடுத்து விஷ்ணு விஷாலோடு எப்.ஐ.ஆர் படத்தில் நடிக்கிறேன். இது க்ரைம் த்ரில்லர்.

இது தவிர நிறைய கதை கேட்டிருக்கிறேன். இன்னும் கமிட் பண்ணல.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!