தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து காலிங்க விடுவிப்பு

Kalinga Kumarage cleared of doping charges

0 1,239

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை தொடர்பிலோ, அதற்கான விதிகளை மீறியமை தொடர்பிலோ மெய்வல்லுநர் காலிங்க குமாரகேவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கமுடியாமல் போனதால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காலிங்க குமாரகே மீதான குற்றச்சாட்டுக்களை தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனைக்கான இலங்கை முகவர் நிறுவனமும் (SLADA- ஸ்லாடா), உலக முகவர் நிறுவனமும் (வாடா) நிரூபிக்கத்தவறியதை அடுத்தே சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் காலிங்க குமார விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் காலிங்க குமாரகேவிடமிருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரி ஏ, கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து இவ் வருடம் ஜனவரி மாதம் 25ஆம் திகதி மாதிரி பி பரிசோதனைக்கு உடபடுத்தப்பட்டது. அப்போது மாதிரி ஏயில் கலந்திருந்த தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து மாதிரி பியிலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தான் நேர்மையானவர் என்பதிலும் நிரபராதி என்பதிலும் உறுதியாகவிருந்த காலிங்க, தனது சட்ட ஆசோகனைக் குழுவினரின் உதவியுடன் மேன்முறையீடு செய்து தான் நிரபராதி என்பதை நிரூபித்தார். காலிங்கவின் சட்ட ஆலோசனைக் குழுவுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி டினால் பிலிப்ஸ் தலைமை தாங்கினார்.

காலிங்கவின் உடலில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து கலந்திருப்பதற்கான சரியான ஆதாரங்களை ஸ்லாடா, வாடா ஆகிய இரண்டு முகவர் நிறுவனங்களும் உறுதிப்படுத்தத் தவியதாக ஜனாதிபதி சட்டத்தரணி டினால் பிலிப்ஸ் தலைமையிலான குழுவினர் வாதாடி அதில் வெற்றியும் கண்டனர். இதனை அடுத்தே சகல குற்றச்சாட்டுகளிலுமிருந்தும் காலிங்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

 
 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!