கிரிக்கெட் வீராங்கனைகள் மூவரை விபசாரத்தில் இணையுமாறு கோரியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் அப்சரி திலக்கரட்ன கோரிக்கை

0 2,444

கிரிக்கெட் வீராங்கனைகள் மூவரை விபசார வளையத்தில் இணையுமாறு கோரிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னாள் தலைமை அதிகாரி அப்சரி திலக்கரட்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதின்ம வயதுடைய மூன்று கிரிக்கெட் வீராங்கனைகளை விபசார வளையத்தில் இணையுமாறு மாத்தறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அழைப்பு  விடுத்ததாகக் கூறப்படுவது கிரிக்கெட் வட்டாரங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்சரி திலக்கரட்ன

இந்த விடயத்தை அம்பலப்படுத்தியதால்  தனது தொழில் இல்லாமல் போயுள்ளதாக வீடியோ பேட்டி ஒன்றில் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னாள் தலைமை அதிகாரி அப்சரி திலக்கரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்பட்ட விசாரணையின்போது சாட்சியமளித்த பயிற்றுநர்கள் இருவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலக்கரட்னவின் மனைவியான அப்சரி திலக்கரட்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்சரி திலக்கரட்ன, ஹஷான் திலக்கரட்ன

இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த வருடம் மார்;ச் மாதம் விசாரணை நடத்தியிருந்தது. ஆனால், விசாரணை தொடர்பான விபரங்கள் மூடிமறைக்கப்பட்டதுடன் தகவல்களை அம்பலப்படுத்தியவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதையும் அமைச்சு அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருந்துவிட்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்;டவரின் வாக்குப் பலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் வருடாந்தப் பொதுக்கூட்ட நிருவாகிகள் தெரிவில் செல்வாக்கு செலுத்தியதால் அது குறித்து அமைதிகாத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள், மாறாக சம்பவத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர் என அப்சரி திலகரட்ன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!