வரலாற்றில் இன்று: டிசெம்பர் 02 : 1987-பாகிஸ்தான் பிரதமராக பெனாஸிர் பூட்டோ பதவியேற்றார்

0 170

1409: உலகின் மிகப் பழைய பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜேர்மனியின் லீப்ஸிக் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.

1755 : ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது எடிஸ்டோன் கலங்கரை விளக்கம் பாரிய தீ விபத்தில் அழிந்தது.

1971: ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்டது

1804 : பிரான்ஸின் பேரரசராக நெப்போலியன் போனபார்ட் பாரிஸில் முடிசூடினார்.

1805 : நெப்போலியனின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்ய-ஆஸ்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.

1843 : யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.

1848 : முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின் பேரரசனானார்.

1852 : மூன்றாம் நெப்போலியன் பிரான்ஸின் பேரரசர் ஆனார்.

1908 : பியூ தனது இரண்டாவது வயதில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.

1942 : மன்காட்டன் திட்டம் என்றிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.

1946 : பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, மற்றும் லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.

1947 : பலஸ்தீன நாட்டைப் பிரிக்க ஐநா சபை எடுத்த முடிவை அடுத்து ஜெருஸலேமில் வன்முறை வெடித்தது.

1954 : சீனாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் வோஷிங்டன் டிசி நகரில் கைச்சாத்திடப்பட்டது.

1956 : பிடல் கஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.

1961 : பிடெல் கஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிஸ-லெனினிஸவாதி எனவும் கியூபா கம்யூனிஸ நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

1971 – அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, டுபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் (யூ.ஏ.ஈ.) என்ற ஒரே நாடாக்;கப்பட்டன.

1975 : பத்தே லாவோ என்பவர் லாவோசின் ஆட்சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தார்.

1976 : பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.

1980 : எல் சல்வடோரில் ஐக்கிய அமெரிக்க கன்னியாஸ்திரிகள் நால்வர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

1982: அமெரிக்காவைச் சேர்நத் பார்னி கிளார்க் என்பவர் நிரந்தர செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதரானார்.

1987: பாகிஸ்தான் பிரதமராக பெனாஸிர் பூட்டோ பதவியேற்றார்

1988 : பெனாஸிர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.

1990 : ஒன்றுபட்ட ஜேர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் ஹெல்முட் கோல் தலைமையிலாண கூட்டணி வெற்றி பெற்றது.

1993 : ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1993: கொலம்பியாவின் பிரபல போதைப்பொருள் புள்ளியான பாப்லோ எஸ்கோபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1999: வட அயர்லாந்துக்கான அரசியல் அதிகாரங்களை வட அயர்லாந்து நிறைவேற்றுக்குழுவுக்கு பிரிட்டன் வழங்கியது.

2006 : இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதி ரயில் விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!