வவுனியாவில் சறுக்கல் விளையாட்டு அறிமுகம்
(ஓமந்தை)
வவுனியாவில் ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கல் விளையாட்டு அறிமுக நிகழ்வு இலங்கை சறுக்கல் விளையாட்டு சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் செயலாளரும், பயிற்றுவிப்பாளருமான நரேந்திரன் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.
அறிமுக நிகழ்வுக்கு முன்பதாக வவுனியா மாவட்ட செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், இலங்கை ஸ்கேட்டிங் சம்மேளனம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை வவுனியா நகரில் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து சறுக்கல் விளையாட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அதன் பயன்கள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தெளிவூடடப் பட்டது.