தெற்காசிய விளையாட்டு விழா – கரப்பந்தாட்டம்: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிகளில் இலங்கை ஆண்கள், பெண்கள் அணிகள்

0 760

நேபா­ளத்தில் நேற்று சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக ஆரம்­ப­மான 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா கரப்­பந்­தாட்­டத்தில் வெண்­கலப் பதக்­கத்­துக்­கான போட்­டி­களில் இலங்கை ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் இன்று விளை­யா­ட­வுள்­ளன.

திரி­பு­ரேஷ்வர், கவர் அரங்கில் இன்று பிற்­பகல் 2.00 மணிக்கு ஆரம்­ப­மாகும் ஆண்­க­ளுக்­கான வெண்­கலப் பதக்­கத்தைத் தீர்­மா­னிக்கும் போட்­டியில் பங்­க­ளா­தேஷை இலங்கை எதிர்த்­தாடும்.

அதனைத் தொடர்ந்து இதே அரங்கில் நடை­பெ­ற­வுள்ள பெண்­க­ளுக்­கான வெண்­கலப் பதக்­கத்தைத் தீர்­மா­னிக்கும் போட்­டியில் மாலை­தீ­வு­களை இலங்கை எதிர்த்­தாடும்.

13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான சம்­பி­ர­தா­ய­பூர்வ ஆரம்ப விழா நேற்று ஆரம்­ப­மா­ன­போ­திலும் கரப்­பந்­தாட்டப் போட்­டிகள் கடந்த மாதம் 27ஆம் திக­தியே ஆரம்­பித்­தி­ருந்­தன.

கரப்­பந்­தாட்ட இறுதிப் போட்­டிக்கு முன்­னோ­டி­யாக நேற்று நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் இந்­தி­யா­விடம் 1 – 3 என்ற செட்கள் அடிப்­ப­டையில் இலங்கை தோல்வி அடைந்­தது.

இந்­தி­யா­வுக்கு பலத்த சவால் விடுத்த இலங்கை சம­நிலை முறிப்­பு­வரை நீடித்த முத­லா­வது செட்டில் 25 – – 27 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் இலங்கை தோல்வி அடைந்­தது. இரண்­டா­வது செட்டில் இந்­தியா 25 — 19 என வெற்­றி­பெற்று 2 — 0 என்ற செட்கள் அடிப்­ப­டையில் முன்­னி­லையில் இருந்­தது.

எனினும் மூன்­றா­வது செட்டில் எதிர்­நீச்சல் போட்ட இலங்கை 25 — 21 என வெற்­றி­பெற்று போட்­டியில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. ஆனால் நான்­கா­வது செட்டில் 25 — 21 என இந்­தியா வெற்­றி­பெற்று தங்கப் பதக்­கத்­துக்­கான இறுதிப் போட்­டியில் பாகிஸ்­தானை நாளை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

பெண்­க­ளுக்­கான 2ஆவது அரை இறுதிப் போட்­டியில் இலங்­கையை 3 நேர் செட்­களில் நேபாளம் வெற்­றி­கொண்­டது. இப் போட்­டியில் 25 — 14, 25 — 18, 25 — 21 என்ற புள்­ளிகள் கணக்கில் நேபாளம் வெற்­றி­பெற்­றது.
முத­லா­வது அரை இறு­தியில் மாலை­தீ­வு­களை 3 – 0 என வெற்­றி­கொண்ட இந்­தி­யாவை இன்று நடை­பெ­ற­வுள்ள தங்கப் பதக்­கத்­துக்­கான போட்­டியில் நேபாளம் எதிர்த்­தா­ட­வுள்­ளது.
(என்.வீ.ஏ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!