ரஷ்யாவில் உறைந்த ஆற்றில் பஸ் வீழ்ந்தது: 19 பேர் பலி

0 576

ரஷ்­யாவில் உறைந்த ஆற்றில் பஸ் வீழ்ந்­ததால் 19 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.ரஷ்­யாவின் கிழக்குப் பகு­தி­யி­லுள்ள சபா­கல்ஸ்கி பிராந்­தி­யத்தில் நேற்று இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

சைட்டா எனும் நக­ரி­லி­ருந்து ஸ்ட்ரேடென்ஸ்க் நகரை நோக்கி இந்த பஸ் சென்­று­கொண்­டி­ருந்­தது.சுமார் 44 பேர் அதில் பயணம் செய்­தனர்.

ஸ்ரெடென்சிக்- ஒலோச்சி நெடுஞ்­சா­லையில் உள்ள பாலத்தில் பஸ் சென்­று­கொண்­டி­ருந்­த­போது, பஸ்ஸின் முன்­பக்க டயர் திடீ­ரென வெடித்­தது.

இதனால் நிலை­கு­லைந்த பஸ் பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்­தது.

சுமார் 20 அடி பள்­ளத்தில் உறைந்த நிலையில் காணப்­பட்ட ஆறு ஒன்றின் மீது இந்த பஸ் வீழ்ந்­தது.

இவ்­வி­பத்தில் 19 பேர் உயி­ரி­ழந்­தனர் எனவும், 21 பேர் காய­ம­டைந்­தனர் எனவும் நோவோஸ்தி செய்திச் சேவை தெரிவித்தது,

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!