தொலைபேசி இணைப்பு பெறும்போது முகத்தை ஸ்கேன் செய்வதை கட்டாயமாக்கும் சீனா

0 111

சீனாவில் மக்கள் புதிய தொலை­பேசி இணைப்­புக்­கான பதி­வு­களை மேற்­கொள்­ளும்­போது அவர்­களின் முகங்­களை ஸ்கேன் செய்­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் இத்­திட்டம் அமு­லுக்கு வந்­துள்­ளது.

இதன்­படி தொலை­பேசி சேவை வழங்­கு­நர்கள், தம்­மிடம் புதிய இணைப்­புக்­காக பதிவு செய்யும் வாடிக்­கை­யா­ளர்­களின் முகங்­களை ஸ்கேன் செய்­வது அவ­சி­ய­மாகும்.

சீனா­வி­லுள்ள கோடிக்­க­ணக்­கான இணையப் பாவ­னை­யா­ளர்கள் தமது உண்­மை­யான பெயரில் இணைய சேவை­களை பயன்­ப­டுத்­து­கின்­றனர் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக இத்­திட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக தெரிக்­கப்­ப­டு­கி­றது.

பிர­ஜை­களின் சட்­ட­பூர்­வ­மான உரி­மை­க­ளையும் நலன்­க­ளையும் உறு­திப்­ப­டுத்த தான் விரும்­பு­வ­தாக சீன அர­சாங்கம் தெரிவி­த்­துள்­ளது. உலகில் மக்­களை மிக அதி­க­மாக கண்­கா­ணிக்கும் நாடு சீனா எனக் கூறப்­ப­டு­கி­றது. 2017 ஆம் ஆண்டில் அந்­நாட்டில் 17 கோடி கண்­கா­ணிப்புக் கெம­ராக்கள் பொருத்­தப்­பட்­டன.

2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 40 கோடியாக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!