13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா கோலாகல ஆரம்பவிழாவுடன் தொடங்கியது!

நேபாள ஜனாதிபதி பித்யா தேசி பண்டாரி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்

0 52

பல்­வகை விளை­யாட்டுப் போட்­டி­களை உள்­ள­டக்­கிய 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா, நேபா­ளத்தின் தலைநர் காத்­மண்­டுவில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்ட்­டுள்ள தசரத் ரங்­க­சாலா விளை­யாட்­ட­ரங்கில் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக இன்றுஆரம்­ப­மா­னது.

இவ் விளை­யாட்டு விழாவை நேபாள ஜனா­தி­பதி பித்யா தேவி பண்­டாரி சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக ஆரம்­பித்து வைத்தார்.
தெற்­கா­சிய விளை­யாட்டு விழா காத்­மண்டு, பொக்­காரா, ஜனக்பூர் ஆகிய நக­ரங்­களில் நடை­பெ­று­வ­துடன் எதிர்­வரும் 10ஆம் திகதி முடி­வு­விழா வைப­வத்­துடன் நிறை­வ­டையும்.

நேபாள நேரப்­படி நேற்றுப் பிற்­பகல் 5.00 மணிக்கு சற்று பின்னர் தொடங்­கிய ஆரம்ப விழா வைப­வத்தில் பங்­கு­பற்றும் நாடு­களின் விளை­யாட்டு வீர, வீராங்­க­னைகள்,அதி­கா­ரி­களின் அணி­வ­குப்பு, தெற்­கா­சிய விளை­யாட்டு விழா கொடி ஏற்றல், தெற்­கா­சிய விளை­யாட்டுத் தீபம் ஏற்றல் மற்றும் கலா­சார நிகழ்ச்­சிகள் ஆகி­யன வழ­மைபோல் நடை­பெற்­றன.
ஆரம்ப விழா வைப­வத்தை 15,000க்கும் மேற்­பட்ட இர­சி­கர்கள் நேர­டி­யாக கண்­டு­க­ளித்­தனர்.

வீர, வீராங்­க­னைகள் சார்­பாக நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பராஸ் கத்­காவும் மத்­தி­யஸ்­தர்கள் சார்பில் சர்­வ­தேச பட்­மின்டன் மத்­தி­யஸ்தர் தீப்பாக் தாப்­பாவும் சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுத்­துக்­கொண்­டனர்.

பங்­க­ளாதேஷ், பூட்டான், இந்தியா, மாலை­தீ­வுகள், பாகிஸ்தான், இலங்கை, போட்­டி­களை முன்­னின்று நடத்தும் வர­வேற்பு நாடான நேபாளம் ஆகிய ஏழு நாடு­களைச் சேர்ந்த 2,500க்கும் மேற்­பட்ட வீர, வீராங்­க­னைகள் 26 வகை­யான விளை­யாட்­டு­களில் 319 தங்கப் பதக்­கங்­க­ளுக்கு குறி­வைத்து போட்­டி­யி­ட­வுள்­ளனர்.

வில்­வித்தை, மெய்­வல்­லுநர், கூடைப்­பந்­தாட்டம், பட்­மின்டன், குத்­துச்­சண்டை, கிரிக்கெட் (ஆண்கள் மற்றும் பெண்கள்), சைக்­கி­ளோட்டம், வாட்போர், கால்­பந்­தாட்டம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), கோல்வ், கைப்­பந்து, ஜூடோ, கபடி, கராத்தே, கோ – கோ, நீச்சல், குறி­பார்த்து சுடுதல், ஸ்கொஷ், மேசைப்­பந்­தாட்டம், டென்னிஸ், டய்க்­வொண்டோ, ட்ரைஎத்லன் (மூவம்ச நிகழ்ச்சி), கரப்­பந்­தாட்டம் மற்றும் கடற்கரை கரப்பந்தாட்டம், பளுதூக்கல், மல்யுத்தம் ஆகிய 26 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.பராக்லைடிங், வூஷு என்பன செயல்விளக்க நிகழ்ச்சிகளாக நடைபெறும். 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!