ஊடகவியலாளரின் கொலை விசாரணை சர்ச்சையால் மால்டா பிரதமர் இராஜினாமா செய்கிறார்!

0 806

ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரின் கொலை விவ­காரம் தொடர்­பான சர்ச்­சை­யை­ய­டுத்து, மால்டா நாட்டின் பிர­தமர் ஜோசப் மஸ்கட் இரா­ஜி­னாமா செய்­ய­வுள்ளார் என அவரின் தொழிற்­கட்­சியைச் சேர்ந்த வட்­டா­ரங்கள் ஏ.எவ்.பியிடம் நேற்­று­முன்­தினம் தெரி­வித்­துள்­ளன.

டெப்னே கரு­வானா கலீ­ஸியா

 

மத்­திய தரைக்­கடல் நாடான மால்­டாவில், ஊட­க­வி­ய­லா­ளரும் ஊழல் எதிர்ப்பு செயற்­பாட்­டா­ள­ரு­மான டெப்னே கரு­வானா கலீ­ஸியா எனும் 53 வய­தான பெண் (53) 2017 ஒக்­டோபர் 17 ஆம் திகதி கார் குண்­டு­வெ­டிப்பு மூலம் கொல்­லப்­பட்டார்.

இக்­கொலை தொடர்பில் கோடீஸ்­வர வர்த்­தகர் யோர்ஜென் பிரெஞ்ச் கடந்த மாதம் 20 ஆம் திகதி கைது செய்­யப்­பட்டார்.

பிர­தமர் ஜோசப் மஸ்கட்

 

இரு அமைச்­சர்கள், பிர­தமர் ஜோசப் மஸ்­கட்டின் முன்னாள் அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யான கீத் ஷேம்­பிரி ஆகியோர் இக்கொலை தொடர்பான சர்ச்சையையடுத்து இராஜினாமா செய்தனர்.

கீத் ஷேம்­பி­ரிதான் இக்­கொ­லையின் சூத்­தி­ர­தாரி என யோர்ஜென் பிரெஞ்ச் அடை­யாளம் கண்­டுள்ளார் என சில வட்­டா­ரங்கள் தெரி­வித்­த­தாக ஏ.எவ்.பி. செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

 

கீத் ஷேம்­பிரி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­யப்­பட்டார். எனினும் வியா­ழக்­கி­ழமை விடு­விக்­கப்­பட்டார்.இக்­கொலை விசா­ர­ணையை கையாண்ட விதம் குறித்து பிர­தமர் ஜோசப் மஸ்கட் மீது கடும் விமர்­சி­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

இந்­நி­லையில் தனது தொழிற்­கட்­சியின் புதிய தலைவர் தெரி­வான பின், ஜன­வரி 18 ஆம் திகதி பிர­தமர் ஜோசப் மஸ்கட் இரா­ஜி­னாமா செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

கீத் ஷேம்­பிரி

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!