டேவிட் வோர்னர் ஆஸி.க்கான துடுப்பாட்ட சாதனை : பாகிஸ்தான் பின்வரிசை வீரர் யாசிர் ஷா கன்னிச் சதம்இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் தடுமாற்றம்

0 68

அடிலெய்டில் டேவிட் வோர்­னரும் யாசிர் ஷாவும் அடிலெய்ட் விளை­யாட்­ட­ரங்கில் வர­லாறு படைத்த இரண்­டா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் பாகிஸ்­தானைத் தொடர்ந்து இரண்­டா­வது இன்­னிங்ஸில் (பலோ ஒன்) துடுப்­பெ­டுத்­தா­டு­மாறு அவுஸ்­தி­ரே­லியா பணித்­தது.

இதற்­க­மைய முதல் இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்­தி­ரே­லி­யா­வை­விட 287 ஓட்­டங்கள் பின்­னி­லையில் இருந்த பாகிஸ்தான், போட்­டியின் மூன்றாம் நாளான நேற்­றைய ஆட்­ட­நேர முடிவில் 3 விக்­கெட்­களை இழந்து 39 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று தடு­மாற்­றத்தை எதிர்­கொண்­டுள்­ளது

 

ஆரம்ப வீரர் ஷான் மசூத் 14 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்தார். பந்­து­வீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 15 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களை வீழ்த்­தி­யி­ருந்தார்.

இன்னிங்ஸ் தோல்­வி­யி­லி­ருந்து பாகிஸ்தான் மீள்­வ­தற்கு இரண்­டா­வது இன்­னிங்ஸில் 7 விக்­கெட்கள் மீத­மி­ருக்க மேலும் 248 ஓட்­டங்கள் பெற­வேண்­டி­யுள்­ளது.

இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. டெஸ்ட் வல்­லவர் தொட­ரா­கவும் அமை­கின்­றது.
கடந்த வெள்­ளி­யன்று ஆரம்­ப­மான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய அவஸ்­தி­ரே­லியா இரண்டாம் நாளன்று தேநீர் இடை­வே­ளைக்கு சற்று முன்னர் தனது முதல் இன்­னிங்ஸை 3 விக்கெட் இழப்­புக்கு 589 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது இன்­னிங்ஸை நிறுத்­திக்­கொண்­டது.

ஆரம்ப வீரர் டேவிட் வோர்னர் 39 பவுண்ட்­றிகள், ஒரு சிக்சர் அடங்­க­லாக ஆட்­ட­மி­ழக்­காமல் 335 ஓட்­டங்­களைக் குவித்து இன்னிங்ஸ் அதி­கூ­டிய ஓட்­டங்ளைப் பெற்ற அவுஸ்­தி­ரே­லியர் என்ற சாத­னைக்கு உரித்­தானார்.

இதன் மூலம் முன்னாள் கிரிக்கெட் விற்­பன்னர் சேர் டொன் ப்றட்மன், முன்னாள் அணித் தலைவர் மார்க் டெய்லர் ஆகி­யோ­ருக்கு கூட்­டாக சொந்­த­மா­க­வி­ருந்த 334 ஓட்­டங்கள் என்ற அதி­கூ­டிய இன்னிங்ஸ் எண்­ணிக்கை சாத­னையை வோர்னர் புதுப்­பித்தார்.

வோர்­ன­ருக்கு பக்­க­ப­ல­மாக துடுப்­பெ­டுத்­தா­டிய மார்னுஸ் லபு­சாஞே 162 ஓட்­டங்­களைக் குவித்தார். இவர்கள் இரு­வரும் இரண்­டா­வது விக்­கெட்டில் 361 ஓட்­டங்­களைப் பகிர்ந்து பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டியில் அனைத்து விக்­கெட்­க­ளுக்­கு­மான புதிய இணைப்­பாட்ட சாத­னையை நிலை­நாட்­டினர்.

தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித்­துடன் (36 ஓட்­டங்கள்) 3ஆவது விக்­கெட்டில் 121 ஓட்­டங்­களும் மெத்யூ வெட்­டுடன் (38 ஆ.இ.) 4ஆவது விக்­கெட்டில் 99 ஓட்­டங்­க­ளையும் டேவிட் வோர்னர் பகிர்ந்தார்.

பாகிஸ்தான் பந்­து­வீச்சில் ஷஹீன் அப்­றிடி 88 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார்.துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அதன் முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 302 ஓட்­டங்­களைப் பெற்­றது.

இதில் 8ஆம் இலக்கு வீரர் யாசிர் ஷா 113 ஓட்­டங்­களைக் குவித்தார். 34 வயதை அண்­மிக்கும் இவர் தனது 37ஆவது டெஸ்ட் போட்­டியில் கன்னிச் சதத்தைக் குவித்து வர­லாறு படைத்தார். முன்­ன­தாக பாபர் அஸாம் 97 ஓட்­டங்­களைப் பெற்றார்.

89 ஓட்­டங்­க­ளுக்கு 6 விக்­கெட்கள் என்ற பரி­தா­ப­மான நிலையில் பாபர் அஸாமும் யாசிர் ஷாவும் ஜோடி சேர்ந்து 7ஆவது விக்­கெட்டில் 105 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தனர். தொடர்ந்து மொஹமத் அபாஸுடன் (28 ஓட்டங்கள்) 9ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களை யாசிர் ஷா பகிர்ந்தார்.

ஆஸி. பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!