வீட்டுக்குள் புதையல் தோண்டிய 3 சகோதரர்கள் கைது!

0 645

(கதீஸ்)

வவு­னியா பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பூந்­தோட்டம் அண்ணா நகர் பகு­தியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்­டிய மூன்று சகோ­த­ரர்கள் வவு­னியா பொலி­ஸாரால் கைது செய்­ய­பட்­டுள்­ளனர்.

 

வவு­னியா பொலி­ஸா­ருக்கு கிடைத்த இர­க­சியத் தக­வ­லை­ய­டுத்து குறித்த வீட்டைச் சுற்­றி­வ­ளைத்த போதே சகோ­த­ரர்­க­ளான 16, 19,21 வய­து­டைய மூவரைக் கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து புதையல் தோண்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட மண்­வெட்டி, சவள் உட்­பட சில பொருட்கள் பொலி­ஸாரால் கைப்­பற்­ற­பட்­டன.

இந்த நட­வ­டிக்கை வவு­னியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்­ப­தி­காரி சம்பத் பெரே­ராவின் வழி­காட்­டலில் குற்­றத்­த­டுப்பு பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பிரனீத் திசா­நா­யக்க தலை­மையில் சென்ற பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

கைது செய்­ய­ப்பட்­ட­வர்­களை மேல­திக விசா­ர­ணை­களின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!