நடிகரிடம் 15 லட்சம் ரூபா கேட்டு மிரட்டல்: இந்திய நடிகை கைது

Actress Sara Shrawan arrested by police in Rs 15 lakh extortion case

0 1,830

நடிகர் ஒருவரிடம் ரூபா 15 லட்சம் கேட்டு மிரட்டியயதாகக் கூறப்படும் இந்திய நடிகை சாரா ஸ்ரவான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த சாரா ஸ்ரவான், சாரா சோனாவான் எனவும் அழைக்கப்படுகிறார். மராட்டிய திரைப்படங்களில் நடித்தவர். இவர் நடிகை இவர் மராட்டிய நடிகர் சுபாஷ் யாதவுடன் இணைந்து நடித்த படம் வெளியான பிறகு நடிகர் சுபாஷ் யாதவ் மீது சாரா ஸ்ரவான் பாலியல் புகார் அளித்தார்.

அதன்பின் சுபாஷ் யாதவ் தனது செயலுக்காக சாரா ஸ்ரவானிடம் மன்னிப்பு கேட்டு அவரது செல்போனுக்கு வீடியோ ஒன்றை அனுப்பினார்.

இந்நிலையில், தனக்கு 15 லட்சம் ரூபா தராவிட்டால் அந்த வீடியோவை அம்பலமாக்கி விடுவேன் என சுபாஷ் யாதவை நடிகi சாரா ஸ்ரவான் மிரட்டினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சாரா ஸ்ரவானின் நண்பியான மற்றொரு மராட்டிய நடிகை இந்த வீடியோவை இணையத்தில் கசியச் செய்தார்

இதனால் நடிகர் சுபாஷ் யாதவ், பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை மீது பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

இது தொடர்பான வழக்கில் முன்பிணை கோரி புனே நீதிமன்றத்தில் சாரா ஸ்ரவான் மனுதாக்கல் செய்தார். பெற்றார்.

இந்த முன்பிணை மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது. அதையடுத்து, மும்பையில் வைத்து சாரா ஸ்ரவானை புனே பொலிஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!