வரலாற்றில் இன்று: டிசெம்பர் 03 : 1984 – போபால் விஷவாயூக் கசிவினால் 3,800 பேர் பலி

0 285

1795 : ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக (கலெக்டர்) நியமிக்கப்பட்டார்.

1800 : மியூ+னிக் அருகில் ஹோஹென்லிண்டென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர்.

1854 : அவூஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

1903 : சேர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.

1904 : வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1984: போபால் விஷவாயூக் கசிவினால் 3,800 பேர் பலி

1912 : பால்கன் போரை முடிவூக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியாஇ கிரேக்க நாடுஇ மொண்டெனேகிரோஇ மற்றும் சேர்பியா ஆகியன துருக்கியூடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன.

1917 : 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூ+பெக் பாலம் திறக்கப்பட்டது.

1944 : கிறீஸில் கம்யூ+னிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

1967 : தென் ஆபிரிக்காவின் கேப் டவூனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

1971 : இந்திய-பாகிஸ்தான் போரில்: இந்திய விமானப்படைத் தளங்கள் மீது பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்தியாஇ பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் ஆரம்பித்தது.

1973 : வியாழனின் முதலாவது மிக அருகிலான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1976 : ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

1978 : வேர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.

1984 : இந்திய நகரான போபாலில் யூ+னியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற விஷ வாயூக் கசிவில் 3இ800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150இ000 முதல் 600இ000 பேர் வரையில் பாதிக்கப்பட்டனர். (இவர்களில் 6இ000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.

1989 : மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ+. புஷ்இ சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையூம் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.

1997 : நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பதுஇ மற்றும் பயன்படுத்துவது தடை செய்யூம் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்காஇ ரஷ்யாஇ சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

2007 : இலங்கைக் கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 709 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

2009: சோமாலியாவின் மொகாடிஷூ நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.

2012: பிலிப்பைன்ஸில் சூறாவளி காரணமாக குறைந்தபட்சம் 475 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!