பாகிஸ்தானுடனான 2 ஆவது டெஸ்ட்டில் ஆஸி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

Australia beat Pakistan by an innings and 48 runs in second Test

0 823

பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும். 48 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஆடிலெய்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ஓட்டங்களைக் குவித்த நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

டேவிட் வோர்ணர் 418 பந்துகளில் 335 ஓட்டங்களைக் குவித்தார். மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 162 ஓட்டங்களைக் குவித்தார்.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்களையே பெற்றது. யாஷிர் ஷா 113 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரின் கன்னி டெஸ்ட் சதமாகும்.

போட்டியின் 3 ஆவது நாளான நேற்றைய ஆட்டமுடிவின்போது பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

4 ஆவது நாளான இன்று 239 ஓட்டங்களுடன் அவ்வணி சகல விக்கெட்களையும் இழந்தது. ஷான் மசூத் 68 ஓட்டங்களையும் அஷான் ஷபீக் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களில் நேதன் லியோன் ஓட்டங்களுககு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் வோர்னர் தெரிவானார். (Photo: AFP)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!