திருமண ஊர்வலத்தின்போது ரூபா 90 லட்சம் பண மழை பொழிந்த மணமகன் (வீடியோ)

Around 90 Lakh rupee notes showered in Gujarat wedding

0 2,218

இந்தியாவில் குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் நடந்த திருமண ஊர்வலத்தின் போது மணமகனும் அவரது வீட்டாரும் ரூபா 90 லட்சம் பணத்தை வாரியிறைத்தனர். அந்தப் பகுதி முழுவதும் பணமழை பொழிந்தது.

குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இசைக் கச்சேரி, சமுதாய விழாக்களின்போது ரூபாய் நோட்டுகளை வாரியிறைப்பது வழக்கம். குறிப்பாக ஆன்மிக கச்சேரிகளில் அதிக அளவில் ரூபாய் நோட்டுகள் வீசப்படும்.

அந்த பணம் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும். சில கச்சேரிகளில் ரூபா 50 லட்சத்துக்கும் அதிகமாக பண மழை கொட்டும்.

இதேபாணியில் குஜராத்தின் ஜாம்நகர் சேலா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரிஷி ராஜ் சிங் ஜடேஜா, தனது திருமண ஊர்வலத்தில் பணத்தை வாரியிறைத்துள்ளார். கடந்த 3ஆம் திகதி அவருக்கு திருமணம் நடைபெற்றது.

இதை யொட்டி சேலா பகுதியின் முக்கிய சாலைகளில் மணமகன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது மணமகன் ரிஷி ராஜ் சிங் ஜடேஜா, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பணத்தை வாரியிறைத்தனர்.

இதுகுறித்து மணமகன் வீட்டார் கூறியபோது, ரூபா 90 லட்சம் வரை பண மழை பொழிந்தோம்” என்றனர்.பின்னர் சேலா பகுதியில் இருந்து மணமகனும் மணமகளும் கண்ட் என்ற கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்தனர்.மணமகனின் அண்ணன், புதுமண தம்பதிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக வழங்கினார்.

திருமணத்தின்போது பெறப்பட்ட நன்கொடைகள் 5 கோசாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.குஜராத்தின் ஜாம் நகரில் நடந்த திருமண ஊர்வலத்தின்போது மணமகன் ரிஷி ராஜ் சிங் ஜடேஜா மற்றும் அவரது நண்பர்கள் பணத்தை வாரியிறைத்தனர்.

நன்றி: இந்து தமிழ்: குஜராத்தில் திருமண ஊர்வலத்தின்போது ரூ.90 லட்சம் பண மழை பொழிந்த மணமகன்

வீடியோ: 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!