கோவையில் 4 வீடுகளின் மீது மதி­ல்­­ வீழ்ந்­ததால் 20 பேர் பலி!

20 killed and many trapped as wall collapses in heavy rains in Coimbatore, TamilNadu

0 786

தமி­ழ­கத்தின் கோயம்­புத்தூர் மேட்­டுப்­பா­ளையம் அருகே இன்று மழையால் மதில் சுவ­ரொன்று 4 வீடுகள் மீது இடிந்து விழுந்ததால் சிறார்­கள்,  பெண்கள் உள்­ளிட்ட 20 பேர் உயி­ரி­ழந்­தனர் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

தமி­ழ­கத்தில் வட­கி­ழக்கு பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. தென் மாவட்­டங்­க­ளான நெல்லை தூத்­துக்­குடி கன்­னி­யா­கு­மரி மாவட்­டங்­களில் பலத்த மழை பெய்து வரு­கி­றது. மேற்கு மாவட்­டங்­க­ளான கோவை, ஈரோடு, திருப்பூர் நீல­கிரி மாவட்­டங்­க­ளிலும் மழை பெய்து வரு­கி­றது.

மேட்­டுப்­பா­ளையம் நடூர் ஏ.டி. கால­னியில் வீடுகள் உள்­ளது. இன்று இரவு பலத்த மழை பெய்­தது. இன்று அதி­காலை 3.30 மணி­ய­ளவில் அங்­குள்ள குடி­யி­ருப்பின் பின்­பக்க மதில் சுவர் திடீ­ரென இடிந்து விழுந்­தது.

அந்த சுவர் 4 வீடு­களின் மீது வரி­சை­யாக விழுந்­தது. அங்கு உறங்கிக் கொண்­டி­ருந்­த­வர்கள் இடி­பா­டு­க­ளுக்குள் சிக்கி கொண்­டனர்.இதனால் இரு சிறார்கள், இரு பெண்கள் உட்­பட 20 பேர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இவர்கள் தவிர தமி­ழ­கத்தின் ஏனைய மாவட்­டங்­களில் குறைந்­த­பட்சம் 6 பேர் உயி­ரி­ழந்­தனர்.சென்னை அம்­பத்­தூரில் மழை நீர் கால்­வாயில் விழுந்து ஒருவர் உயி­ரி­ழந்தார். நெல்லை மாவட்­டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலி­யானார்.

புதுக்­கோட்­டையில் மோட்டர் சைக்­கிளில் சென்ற ஒருவர் மழை நீர் கால்­வாயில் விழுந்து உயி­ரி­ழந்தார்.
தஞ்சை மாவட்­டத்­திலும்இ திரு­வாரூர் மாவட்டம்இ அரி­யலூர் மாவட்­டங்­க­ளிலும் குறைந்­த­பட்சம் தலா ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

பலத்த மழை கார­ண­மாக காஞ்­சீ­புரம், செங்­கல்­பட்டு, கடலூர், ராம­நா­த­புரம் மாவட்­டங்­களில் இன்று   திங்கட் கிழமை பாடா­ச­லை­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டது.

சென்னை, திரு­வள்ளூர், தூத்­துக்­குடி மாவட்­டங்­களில் பள்ளி மற்றும் கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை விடப்­பட்­டுள்­ளது.
இந்த சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்தவர்களின்   குடும்­பத்­தி­ன­ருக்கு ரூ.4 லட்சம் நிவா­ரண தொகை அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இதைத்­தொ­டர்ந்து தமி­ழக முதல் அமைச்சர் பழனிசாமி சம்பவ பகுதிகளை நேரில் பார்வையிட்டுஉயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற கோவைக்கு இன்று செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!