அம்பலாங்கொடை வாகன விபத்தில் மூவர் பலி! மேலும் மூவர் காயம்

0 955

அம்பலாங்கொட, ஊரவத்த பிரதேசத்தில் இன்று(02) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரு மகள்களும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!