கல்முனை சென்ற வேன் மரத்தில் மோதுண்டு 9 பேர் காயம்!

0 993

                                                                                     (க.கிஷாந்தன்)
ஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வேன் ஒன்று மரத்தில் மோதுண்டதில் ஒன்பது பேர் பலத்த காயமடைந்து பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பகுதியிலிருந்து கல்முனை பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (02) இடம்பெற்றுள்ளது

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!