ஜோர்டானில் தீயினால் 8 சிறார்கள் உட்பட 13 பாகிஸ்தானியர்கள் பலி

13 Pakistanis, including 8 children of a family, burnt to death in Jordan

0 2,653

ஜோர்டான் நாட்டில் வீடொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 8 சிறார்கள் உட்பட பாகிஸ்தானை சேர்ந்த பண்ணை தொழிலாளிகள் குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர்.

ஜோர்டானின் மேற்குப் பிராந்தியத்திலுள்ள சௌத் ஷோனா எனும் இடத்திலுள்ள பண்ணையொன்றில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர.

தலைநகர் அம்மானிலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தூரத்தில், இப்பண்ணை அமைந்துள்ளது. இப்பண்ணையில் பணியாற்றிய பாகிஸ்தானியர்கள் இருவர் தங்கள் குடும்பத்தினருடன் தகர வீடுகளில் வசித்து வந்தனர்.

இந்நிலையில இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 8 சிறார்கள் உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தல் மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர் என பொலிஸார தெரிவித்துள்ளனர்.

இச்­சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளல 7 பேர் சிறார்கள் எனவும் நால்வர் பெண்கள் எனவும் அல் மம்­லகா தொலைக்­காட்­சிக்கு தீய­ணைப்புச் சேவையின் பேச்­சாளர் இயாத் அல் ஒமாரி தெரி­வித்­துள்ளார்.

ஜோர்­தானில் ஆயி­ரக்­க­ணக்­கான பாகிஸ்­தா­னி­யர்கள் வசிக்­கின்­றனர். அவர்­களில் பெரும்­பா­லானோர் விவ­சாயப் பண்­ணை­களில் பணி­யாற்­று­கின்­றனர்ஜோர்­தானில் வீடுகள் தீப்­பற்­று­வ­தற்கு அடிக்­கடி கார­ண­மாக அமை­வது, அவ்­வீ­டு­களில் தங்­கி­யுள்­ள­வர்கள் உறங்கும் போது சூடேற்றுவதற்காக மலிவான, ஆனால் ஆபத்தான முறைகளை பயன்படுத்துவதாக என ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

(Photo AFP.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!