இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் உதவியளிக்க வேண்டும்! -ஜனாதிபதி கோட்டாபய

0 2,342

                                                                                                                                               (எம்.மனோசித்ரா)
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்தபோதே இந்த அழைப்பை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல் ஆகியன தற்போது எமது நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும் என தெரிவித்ததுடன் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இதேவேளை, இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் எமக்கு உதவியளிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!