கஞ்சிப்பானை இம்ரானின் சிறைக் கூட கதவின் துளையிலிருந்து கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசி! 

0 190

(ரெ.கிறிஷ்ணகாந்)

காலி, பூஸா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் எனக் கருதப்படும் கஞ்சிப்பானை இம்ரானின் சிறைக் கூடத்திலிருந்து நேற்று அதிகாலை கைத்தொலைபேசி ஒன்றை மீட்டுள்ளதாக சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

(வைப்பகப்படம்)

 

சிறைச்சாலை தலைமையக புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைத்தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. பூஸா சிறைச்சாலையில் விசேட குற்றவாளிகளை தடுத்துவைக்கும் சிறைக்கூடம் ஒன்றில்  இவர் பிரத்தியேகமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்தச் சிறைக்கூடத்தின் கதவிலுள்ள துளை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தொலைபேசி மீட்கப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.  சாதாரண தொலைபேசியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் அதில் சிம் அட்டை காணப்படவில்லை என்றும் சிறைச்சாலை புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

பூஸா சிறைச்சாலையினுள் சிசிரீவி கெமரா கட்டமைப்பு காணப்படுவதாகவும் சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியுடனேயே இந்தத் தொலைபேசி பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக சிறைச்சாலை புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

கஞ்சிப்பானை இம்ரான் இறுதியாக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த 30 ஆம் திகதி மீண்டும் பூஸா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!