ஹெவ்லொக்ஸ், கண்டி, சீ. ஆர். வெற்றி ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

0 32

(நெவில் அன்­தனி)

இலங்கை றக்பி ஒன்­றி­யத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள 2019–2020 டயலொக் றக்பி லீக்கின் முதலாம் வார றக்பி போட்­டி­களில் ஹெவ்லொக்ஸ் கழ­கமும் கண்டி கழ­கமும் இல­கு­வான வெற்­றி­களை ஈட்­டி­ய­துடன் சீ. ஆர். அண்ட் எவ். சி. இறுக்­க­மான வெற்­றியைப் பதிவு செய்­தது.

சீ. எச். அண்ட் எவ். சி.க்கும் இரா­ணு­வத்­துக்கும் இடை­யி­லான போட்டி கடும் மழைக்கு மத்­தியில் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது.

வெலி­சறை கடற்­படை மைதா­னத்தில் நடை­பெற்ற போட்­டியில் கடற்­படை அணியை 35 (5 ட்ரைகள், 5 கொன்­வேர்­ஷன்கள்) – 3 (ஒரு பெனல்டி) என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் ஹெவ்லொக்ஸ் கழகம் மிக இல­கு­வாக வெற்­றி­பெற்­றது.

ஹெவ்லொக்ஸ் சார்­பாக அஸ்மிர் பாஜுதீன், மித்துன் ஹப்­பு­கொட, ரெண்டி சில்வா, ருக்மால் பெர்­னாண்டோ, தினுஷான் ஆரி­ய­பொல ஆகியோர் ட்ரைகளை வைத்­தனர். ப்றின்ஸ் சாமர 5 கொன்­வேர்­ஷன்­களை இலக்கு தவ­றாமல் உதைத்தார்.

கண்டி கழ­கத்­துக்கு வெற்றி
நித்­த­வளை மைதா­னத்தில் நடை­பெற்ற மற்­றொரு போட்­டியில் விமா­னப்­டையை எதிர்த்­தா­டிய கண்டி கழகம் 26 (3 ட்ரைகள், 3 கொன்­வேர்­ஷன்கள்) – 8 (ஒரு ட்ரை, ஒரு பெனல்டி) என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்­றி­பெற்­றது.

இடை­வே­ளை­யின்­போது கண்டி கழகம் 19–3 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் முன்­னி­லையில் இருந்­தது.சீ. ஆர். வெற்றி
லோங்டன் ப்ளேஸ் மைதா­னத்தில் நடை­பெற்ற பொலிஸ் கழ­கத்­துக்கு எதி­ரான போட்­டியில் கடும் சவா­லுக்கு மத்­தியில் 17 (2 ட்ரைகள், 2 கொன்­வேர்­ஷன்கள், ஒரு பெனல்டி) – 13 (2 ட்;ரைகள், ஒரு பெனல்டி) என்ற புள்­ளிகள் கணக்கில் சீ. ஆர். அண்ட் எவ். சி. இறுக்­க­மான வெற்­றியை ஈட்­டி­யாது.

வெற்றி தோல்வி இல்லை
சீ. எச். அண்ட் எவ். சி. கழ­கத்­துக்கும் இரா­ணு­வத்­துக்கும் இடையில் நடை­பெற்ற மிகவும் பர­ப­ரப்­பான போட்டி 8–8 என்ற புள்­ளிகள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.இரண்டு அணிகளும் தலா ஒரு ட்ரை வைத்ததுடன் ஒரு பெனல்டியைப் போட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!