டைக்வொண்டோவில் இலங்கைக்கு முதல் தங்கம்! பாலுராஜ் இலங்கைக்கான முதல் பதக்கத்தை வென்றார்

0 182

(நேபா­ளத்­தி­லி­ருந்து எஸ்,ஜே,பிரசாத்)

நேபா­ளத்தில் நடை­பெற்­று­வரும் 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்­கைக்­கான முத­லா­வது தங்கப் பதக்­கத்தை டைக்­வொண்டோ போட்­டியில் ரணுக்க பிரபாத் வென்­று­கொ­டுத்தார். கராத்தே காட்டா நிகழ்ச்­சியில் இலங்­கையின் எஸ்.பாலுராஜ் வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

விழாவின் இரண்டாம் நாளான நேற்று மாலை 6.00 மணி­வரை நடை­பெற்று முடிந்த விளை­யாட்டுப் போட்­டி­களின் பிர­காரம் இலங்கை 2 தங்கப் பதக்­கங்கள், 4 வெள்ளிப் பதக்­கங்கள், வெண்­கலப் பதக்­கங்­க­ளுடன் 14 பதக்­கங்­களை வென்று பதக்கப் பட்­டி­யலில் மூன்­றா­மி­டத்தில் இருந்­தது.

இலங்­கைக்கு முதல் தங்கம்17 வய­துக்கும் 23 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்­க­ளுக்­கான தனி­நபர் டைக்­வொண்டோ பூம்சே வகை போட்­டியில் 8.230 புள்­ளி­களைப் பெற்ற ரணுக்க பிரபாத் இலங்­கைக்­கான முத­லா­வது தங்கப் பதக்­கத்தை வென்­று­கொ­டுத்தார். இதே வய­துக்­கான பூம்சே கலப்பு இரட்­டையர் பிரி­விலும் இலங்­கையின் இசுரி சுஹா­ராவும் ரனுக்­கவும்  தங்­கப்­ப­தக்­கத்தை சுவீ­க­ரித்­தனர்.

இவர்­களை விட டைக்­வொண்டோ பூம்சே வகை நிகழ்ச்­சி­களில் பெண்­க­ளுக்­கான 25–29 வய­துக்­குட்­பட்ட பிரிவில் மாதவி தில­க் ஷிக்கா (தனி­நபர்) வெள்ளிப் பதக்­கத்­தையும், 17–23 வய­துக்­குட்­பட்ட பிரிவில் இசுரி சுஹாரா (தனி­நபர்), 29 வய­துக்கு மேற்­பட்ட பிரிவில் காயத்ரி சந்­த­மாலி (தனி­நபர்) ஆகியோர் வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்­றனர்.

ஆண்­க­ளுக்­கான 29 வய­துக்கு மேற்­பட்ட பிரிவில் லக்ஷ்மன் இழந்­தா­ரிகே (தனி­நபர்) வெள்ளிப் பதக்­கத்­தையும் 23–29 வய­துக்­குட்­பட்ட பிரிவில் நிஷ்­ஷன்க ஜய­சிங்க (தனி­நபர்) வெண்­கலப் பதக்­கத்­தையும் 25 –29 கலப்பு இரட்­டையர் பிரிவில் மாவி தில­க் ஷனா, நிஷ்­ஷன்க ஜோடி­யினர் வெள்ளிப் பதக்­கத்­தையும் வென்­றனர்.

கராத்தே காட்­டாவில் இலங்­கைக்கு 4 பதக்­கங்கள்
கராத்தே காட்டா ஆண்கள் பிரிவில் இலங்­கையின் சௌந்­த­ர­ராசா பாலுராஜ், பெண்கள் பிரிவில் ஹேசானி ஆகியோர் வெண்­கலப் பதக்­கங்­களை வென்­றனர். அணி நிலைக்­கான கட்டா பிரிவில் இலங்கை ஆண்கள் அணி வெள்ளிப் பதக்­கத்­தையும் பெண்கள் அணியும் வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்­றெ­டுத்­தன.

கரப்­பந்­தாட்­டத்தில் வெண்­கலம்
இலங்­கையின் தேசிய விளை­யாட்­டான கரப்­பந்­தாட்­டத்தில் பங்­க­ளாதேஷ் அணியை 3 – 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் இலங்கை ஆண்கள் அணி வெற்­றி­கொண்டு வெண்­கலப் பதக்­கத்தை வென்­றது.

முதல் செட்டில் 23-25 என தோல்வி அடைந்த இலங்கை அடுத்த 3 செட்­க­ளிலும் முறையே 25-20, 25-16, 25-21 என வெற்­றி­யீட்டி வெண்­கலப் பதக்­கத்தை வென்­றது.

இலங்கை பெண்கள் கரப்­பந்­தாட்ட அணிக்கும் வெண்­கலப் பதக்கம் கிடைத்­துள்­ளது.நேபாளம் வந்த இலங்கை வீராங்­க­னைக்கு டெங்கு13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா மேசைப்பந்தாட்டத்தில் பங்குபற்ற வருகைதந்தஇலங்கையின் திபன்தி பண்டாரவுக்கு  டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளதால் அவர் கத்மண்டுவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!