மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் நேபாளத்தின் அஞ்சலி உலக சாதனை

0 109

நேபா­ளத்தில் நடை­பெற்­று­வரும் 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் முதல்­த­ட­வை­யாக இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ள சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் பந்­து­வீச்­சுக்­கான புதிய உலக சாத­னையை நேபாள வீராங்­கனை அஞ்­சலி சாந்த் நிலை­நாட்­டி­யுள்ளார்.

மாலை­தீ­வுகள் மகளிர் அணிக்கு எதி­ராக பொக்­காரா மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற மகளிர் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் 2.1 ஓவர்கள் பந்­து­வீசி ஓட்டம் எதுவும் கொடுக்­காமல் 6 விக்­கெட்­களை வீழ்த்­தி­யதன் மூலம் புதிய உலக சாதா­னையை அஞ்­சலி நிலை­நாட்­டினார். இதில் ஹெட் – ட்ரிக்­கையும் அவர் பதி­வு­செய்து பலத்த பாராட்­டு­தல்­களைப் பெற்றார்.

இதற்கு முன்னர் சீன மகளிர் அணிக்கு எதி­ராக பாங்­கொங்கில் கடந்த ஜன­வரி மாதம் நடை­பெற்ற மகளிர் சர்­வ­தேச இரு­பது 20 போட்­டியில் 3 ஓட்­டங்­க­ளுக்கு 6 விக்­கெட்­களை வீழ்த்­திய மலே­சி­யாவின் மாஸ் எலி­சாவின் சாத­னை­யையே அஞ்­சலி நேற்று புதுப்­பித்தார்.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய மாலை­தீ­வுகள் மகளிர் அணி 10.1 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 16 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது.

ஆரம்ப வீராங்­கனை ஹம்ஸா நியாஸ் 9 ஓட்­டங்­க­ளையும் மத்­தி­ய­வ­ரிசை வீராங்­க­னை­களில் ஒரு­வ­ரான ஹவ்சா அப்­துல்லா 4 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். உதி­ரி­க­ளாக 3 ஓட்­டங்கள் கிடைத்­தன. ஏனைய அனை­வரும் ஓட்டம் பெறாமல் ஆட்­ட­மி­ழந்­தனர்.

நேபாளம் சார்­பாக பந்­து­வீச்சில் ஐந்­தா­வது வீராங்­க­னை­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்ட அஞ்­சலி சாந்த், தனது இரண்­டா­வது ஓவரில் கடைசி இரண்டு பந்­து­க­ளிலும் மூன்­றா­வது ஓவரின் முத­லா­வது பந்­திலும் விக்­கட்­களை சரித்து ஹெட் – ட்ரிக்கை பதிவு செய்தார்.

கருணா பண்­டாறி 4 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களை வீழ்த்­தினார். இருவர் ரன் அவுட் ஆகினர்.பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய நேபாளம் 5 பந்­து­களை மாத்­திரம் எதிர்­கொண்டு விக்கெட் இழப்­பின்றி 17 ஓட்­டங்­களைப் பெற்று 10 விக்­கெட்­களால் வெற்­றி­யீட்­டி­யது.

ஆரம்ப வீராங்­கனை கஜால் ஷ்ரேஷ்தா ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களைப் பெற்றார். தெற்காசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டிகளில் 23 வயதுக்குட்பட்ட இலங்கை, பங்களாதேஷ் மகளிர் அணிகளும் பங்குபற்றுகின்றன.
(என்.வீ.ஏ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!