காலி முகத்திடலில் இடம்பெறும் மோசடிகள், குறைபாடுகளை அவதானிக்க கண்காணிப்பு குழு

0 851

(எம்.மனோ­சித்ரா)

கொழும்பு காலி முகத்­தி­டலில் இடம்­பெறும் மோச­டிகள் மற்றும் அங்­குள்ள குறை­பா­டுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு 24 மணித்­தி­யா­லங்­களும் செயற்­படும் வகை­யி­லான கண்­கா­ணிப்பு குழு ஒன்றை நிய­மிக்­கு­மாறு துறை­மு­கங்கள், கப்­பல்­துறை மற்றும் வீதி, பெருந்­தெ­ருக்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ துறை­முக அதி­கார சபையின் அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ

காலி­முகத் திட­லுக்கு கண்­கா­ணிப்பு விஜயம் ஒன்றை மேற்­கொண்­டதன் பின்­னரே அமைச்சர் இவ்­வாறு பணிப்­புரை விடுத்­துள்ளார்.

காலி­மு­கத்­தி­டலின் முகா­மைத்­துவ மற்றும் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை உரிய முறையில் முன்­னெ­டுப்­ப­தற்கு அவ­சி­ய­மான பல தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்­ ஷவின் கொள்கை திட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ‘அனை­வ­ருக்கும் தூய்­மை­யான நாட்டை கைய­ளித்தல் ‘ எனும் எண்­ணக்­க­ரு­வுக்கு அமைய பொழுது போக்கு மற்றும் ஓய்­வுப்­பொ­ழுதை கழிப்­ப­தற்­காக பொது­மக்கள் வருகை தரும் கடற்­க­ரைசார் காலி­மு­கத்­தி­டலை சுத்­த­மான இட­மாக மாற்­றி­ய­மைக்கும் நோக்­கத்­து­டனே மேற்­கூ­றப்­பட்ட தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

காலி முகத்­தி­டலில் உள்ள குறை­பா­டு­களை வெகு­வி­ரைவில் நிவர்த்தி செய்­யு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுக்­கப்­பட்­ட­துடன் உல்­லாசப் பய­ணிகள் மற்றும் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு இடை­யூ­றுகள் ஏற்­ப­டா­த­வாறு வீதி­களை புன­ர­மைத்தல்,

சிறு கடை­களில் மக்­களின் சுதந்­தி­ரத்­துக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முறை ஒன்­றினை திட்­ட­ மி­டுதல் மற்றும் கடற்­க­ரையை முழு­மை­யாக சுத்தம் செய்தல் ஆகிய செயற்­பா­டு­களை விரை­வாக முன்­னெ­டுக்­கு­மாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!