டயலொக் றக்பி லீக் போட்டிகள் ஆரம்பம்
இலங்கையில் உள்ள எட்டு முதல்தர றக்பி கழகங்கள் பங்குபற்றும் டயலொக் றக்பி லீக் போட்டிகள் கடந்த வார இறுதியில் ஆரம்பமானது.
நடப்பு சம்பியன் கண்டி, ஹெவ்லொக்ஸ், சீ. ஆர். அண்ட் எவ். சி., சீ. எச். அண்ட் எவ். சி., கடற்படை, இராணுவம், பொலிஸ், விமானப்படை ஆகிய எட்டு கழகங்கள் மூன்று சுற்றுகளைக் கொண்ட றக்பி லீக் போட்டிகளில் பங்குபற்றும் இப் போட்டிக்கு டயலொக் ஆசியாட்டா நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.
முன்னர் இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்ட இப் போட்டிகள் கடந்த வருடத்திலிருந்து முதல் சுற்று லீக், இரண்டாம் சுற்று லீக், மூன்றாம் சுற்று சுப்பர் லீக் என்ற மூன்று சுற்றுகள் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் இரண்டு சுற்றுகளில் பெறப்படும் புள்ளிகளுடன் கழகங்கள் சுப்பர் சுற்று லீக்கில் மோதும்.முதல் நான்கு இடங்களில் உள்ள கழகங்கள் டயலொக் றக்பி லீக் கிண்ணத்துக்காகவும் கடைசி நான்கு இடங்களில் உள்ள கழகங்கள் டயலொக் றக்பி கோப்பைக்காகவும் சுப்பர் சுற்று லீக்கில் விளையாடும்.
இம் முறை முதல் தடவையாக அதி சிறந்த றக்பி வீரர் தெரிவு செய்யப்பட்டு டயலொக் வி ஐ யு விருது வழங்கப்படும்.
டயலொக் றக்பி லீக் போட்டிகளுக்கு டயலொக் ஆசியாட்டா நிறுவனம் 8ஆவது வருடமாக அனுசரணை வழங்குகின்றது.
ஹெவ்லொக்ஸ் மைதானத்தில் டயலொக் கிண்ணம் அறிமுகம் செய்யப்பட்டது.
டயலொக் றக்பி லீக் வெற்றிக் கிண்ணத்துடன் அணித் தலைவர்களான ரேனுக்க மெதகெதர (விமானப்படை), ரோஹித்த ராஜபக்ஷ (சீ.எச். அண்ட் எவ்.சி.), மித்துன் ஹப்புகொட (ஹெவ்லொக்ஸ்), றிச்சர்ட் தர்மபால (கடற்படை), மனோஜ் பண்டார (இராணுவம்), நைஜல் ரத்வத்தே (கண்டி), சானக்க ஹரிஸ்சந்த்ர (பொலிஸ்), ஓமல்க குணரட்ன (சீ.ஆர். அண்ட் எவ்.சி.) ஆகியோர் இங்குள்ள படத்தில் காணப்படுகின்றனர்.