ராஜிதவின் சர்ச்சைக்குரிய ஊடக சந்திப்பு தொடர்பில் CID விசாரணை!

0 551
File Photo

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இரு நபர்களை அழைத்துவந்து, ஜனாதிபதித் தேர்தலை அண்மித்த தினத்தில் நடத்திய சர்ச்சைக்குரிய ஊடக சந்திப்பு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த ஊடகசந்திப்புக்கு நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலை, கடத்தல் மற்றும்; காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தெரிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தெடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஊடக சந்திப்பு தொடர்பில் கங்கொடவிலகே குமுது சஞ்சீவ பிரதீப் பெரேரா என்பவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அதன் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்தாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றுக்கு மேலும் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!