பீபா கடற்கரை கால்பந்தாட்டப் போட்டியில் போர்த்துக்கல் உலக சம்பியனானது

0 117

பரா­கு­வேயின் அசுன்­சியன், லொஸ் பியான்டி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 10 ஆவது கடற்­கரை கால்­பந்­தாட்ட உலகக் கிண்ணப் போட்­டியில் போர்த்­துக்கல் சம்­பி­ய­னா­னது.

 

ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் இத்­தா­லியை 6 -–- 4 என்ற கோல்கள் கணக்கில் வெற்­றி­யீட்டிய போர்த்­துக்கல் இரண்­டா­வது தட­வை­யாக உலகச் சம்­பி­ய­னாக முடி­சூ­டி­யது.

கடற்­கரை கால்­பந்­தாட்ட உலகக் கிண்ணப் போட்­டியில் மொத்தம் 16 நாடுகள் பங்­கு­பற்­றின. 2015இல் உலக சம்­பி­ய­னான போர்த்­துக்கல் இரண்­டா­வது தட­வை­யாக உலக சம்­பி­யா­னாகும் வேட்­கை­யு­டனும், 2008இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற இத்­தாலி முதல் முறை­யா­வது உலக சம்­பி­ய­னாகும் கன­வு­டனும் இறுதிப் போட்­டியில் ஒன்­றை­யொன்று எதிர்த்­தா­டின.

தலா 12 நிமி­டங்­களைக் கொண்ட மூன்று ஆட்ட நேரப் பகு­தி­க­ளாக மொத்தம் 36 நிமி­டங்கள் நடை­பெற்ற இறுதிப் போட்­டியின் 5ஆவது நிமி­டத்தில் இத்­தாலி சார்­பாக சுர்லோ முத­லா­வது கோலைப் போட்­டது. ஆனால், அடுத்த இரண்­டா­வது நிமி­டத்தில் போர்த்­துக்கல் சார்­பாக லியோ மார்ட்டின்ஸ் கோல் நிலையை சமப்­ப­டுத்­தினார்.

இரண்­டா­வது 12 நிமிட ஆட்­ட­நேரப் பகு­தியில் ஆதிக்கம் செலுத்­திய போர்த்­துக்கால் 18ஆவது நிமி­டத்தில் ஜோர்டன், அண்ட்றெ ஆகியோர் மூலம் அடுத்­த­டுத்து 2 கோல்­களைப் போட்டு 3 ––1 என முன்­னிலை அடைந்­தது.

கடைசி 12 நிமிட ஆட்­ட­நேரப் பகு­தியில் இத்­தா­லிக்கு 26 ஆவது நிமி­டத்தில் கிடைத்த பெனால்­டியை நட்­சத்­திர வீரர் கெப்­ரியல் கோரி தவ­ற­விட்டார்.போர்த்­துகல் சார்­பாக 28ஆவது நிமி­டத்தில் ஜோர்­டனும் 2 நிமி­டங்கள் கழித்து லியோ மார்ட்­டின்ஸும் கோல்­களைப் போட்­டனர். இவர்கள் இரு­வரும் தத்­த­மது இரண்­டா­வது கோல்­களைப் போட்­டமை விசேட அம்­ச­மாகும்.

இதற்கு பதி­லடி கொடுக்கும் வகையில் இத்­தாலி சார்­பாக 31ஆவது நிமி­டத்தில் ஜோசப் (ஜூனியர்), ரமா­சி­யொட்டி ஆகிய இரு­வரும் கோல்­களைப் போட்­டனர். எவ்­வா­றா­யினும் போட்டி முடி­வ­டைய சுமார் 2 நிமி­டங்கள் இருந்­த­போது ஜோர்டன் மேலும் ஒரு கோலைப் போட போர்த்­துக்கல் 6 –– 4 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது.

இதே­வேளை, மூன்றாம் இடத்தைத் தீர்­மா­னிக்கும் போட்­டியில் ஜப்­பானை 5 –– 4 எனற் கோல்கள் கணக்கில் வெற்­றி­கொண்ட ரஷ்யா வெண்­கலப் பதக்­கத்தை வென்­றது.

கடற்­கரை கால்­பந்­தாட்ட உலகக் கிண்ணப் போட்­டியில் மொத்தம் 16 கோல்­களைப் போட்ட இத்­தா­லியின் கெபி­ரியல் கோரி அதிக கோல்கள் போட்ட வீர­ருக்­கான விருதை வென்­றெ­டுத்தார்.

சிறந்த வீர­ருக்­கான தங்கப் பந்தை ஜப்­பானின் ஒசு மொரெய்­ராவும், சிறந்த கோல் காப்பாளருக்கான தங்க கையுறையை போர்த்துக்கல்லின் எலின்டன் அண்ட்றாடேயும் வென்றெடுத்தனர். நேர்த்தியான விளையாட்டுக்குரிய விருதை செனகல் தனதாக்கிக்கொண்டது. (எம்.எம்.எஸ்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!