பாகிஸ்தானில் 11 வயது சிறுமி கல்லெறிந்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு! பெற்றோர் உட்பட நால்வர் கைது

0 674

பாகிஸ்­தானில் 11 வய­தான சிறுமி கல்­லெ­றிந்து கொல்­லப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்­பாக அச்­சி­று­மியின் பெற்றோர் உட்­பட நால்­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

பாகிஸ்தானில் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில்… (வைப்பகப்படம்)

 

பாகிஸ்­தானின் சிந்து மாகா­ணத்­தி­லுள்ள தாடு மாவட்­டத்தில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இக்­கொலை இடம்­பெற்­ற­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

மண்­ச­ரிவு கார­ண­மாக இச்­சி­றுமி உயி­ரி­ழந்­த­தாக இச்­சி­று­மியின் பெற்றோர் முதலில் கூறி­ய­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

ஆனால், இச்­சி­றுமி கல்­லெ­றிந்து கொல்­லப்­பட்­டுள்ளாள் என தகவல் பர­வி­யது. இதை­ய­டுத்து இது குறித்து பொலிஸார் விசா­ரணை நடத்­தினர்.

இது தொடர்­பாக தாடு மாவட்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பரூக் ரஸா கூறு­கையில், ‘நாம் தக­வல்­களை ஆராய்ந்து வரு­கிறோம். எனினும், சிறு­மியின் பெற்­றோ­ரையும், இறு­திச்­ச­டங்­குக்கு தலைமை தாங்­கிய மத­குரு ஒரு­வ­ரையும் மற்­றொ­ரு­வ­ரையும் நாம் கைது செய்­துள்ளோம்’ எனத் தெரி­வித்­துள்ளார். கடந்த சனிக்­கி­ழமை சிறு­மியின் பெற்றோர் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

இச்­சி­று­மியை கல்­லெ­றிந்து கொல்­வ­தற்கு அவளின் தந்தையும் உற­வினர் ஒரு­வரும் மேலும் நால்­வரும் சதி செய்­தனர் என பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இத்தகவல்களை இன்னும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என பொலிஸ் அத்தியட்சகர் பரூக் ரஸா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!