5 மாதங்களில் 1,300 கிலோமீற்றர் தூரம் நடந்த புலி

0 271

இந்தியாவில் புலி ஒன்று 5 மாத காலத்தில் சுமார் 1,300 கிலோமீற்றர் (807 மைல்) தூரம் நடந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

 இந்தப் பெண் புலியானது இரை தேடுவதற்காக அல்லது இனவிருத்திக்காக இவ்வளவு தூரம் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இப்புலியின் மீது ரேடியோ கோலர் சாதனமொன்றை அதிகாரிகள் பொருத்தியிருந்தனர்.

கடந்த ஜூன் மாதம் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வனவிலங்கு சரணாலயமொன்றில் இப்புலி விடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.அதன்பின், பண்ணைகள், நெடுஞ்சாலைகள், மற்றும் அருகிலுள்ள மாநிலங்களுக்கு இப்புலி சென்று வந்தமை தெரியவந்துள்ளது.

கடந்த 5 மாத காலத்தில் இப்புலி  ஒரேயொரு தடவை மாத்திரமே மனிதர்களுடன் மோதலில் சம்பந்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்புலி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பகுதிக்குள் மனிதர்கள் சிலர் சென்றபோது தற்செயலாக ஒரு நபரை இப்புலி காயப்படுத்தியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!