ஹெரி பொட்டர் திரைப்படத்தின் அற்புதத் தொப்பியை (Sorting Hat) நிஜத்தில் உருவாக்கிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக கணினி பிரிவு மாணவர்கள் சர்வதேச ரொபோட்டிக் போட்டியில் முதலிடம் பெற்றனர்!

0 615

(ரெ.கிறிஷ்­ணகாந்)

உலகப்புகழ்­பெற்ற ஹெரி பொட்டர் திரைப்­ப­டத்தில் வரும் அற்­புதத் தொப்­பியை (Sorting Hat) நிஜத்தில் உரு­வாக்­கிய ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் பிர­யோக விஞ்­ஞா­ன பீடத்தின் கணி­னி­யியல் பிரிவைச் சேர்ந்த மாண­வர்கள் சர்­வ­தேச ரொபோட்டிக் போட்­டியில் முத­லி­டத்தை வென்­றுள்­ளனர்.

ஏ.சி.கம்­மன்­பில, ஏ.ஜி. விஜே­சிங்க, டீ.என். வன்­னி­ஆ­ரச்சி, ஈ.எம்.டீ.என். அமா­ஜீவ, டீ.வை. ஜய­சிங்க மற்றும் பீ. ரவீந்­திர சில்வா ஆகிய மாண­வர்­களே இந்த அற்­புதத் தொப்­பியை உரு­வாக்­கியவர்­க­ளாவர். ஸ்பெய்னின் மெட்ரிட் நகரில் கடந்த நவம்பர் 26 முதல் 29 ஆம்­ தி­க­தி­வரை இந்த சர்­வ­தேச ரொபோடிக் போட்டி நடை­பெற்­றது.

ஆசிய, ஐரோப்­பிய மற்றும் அமெ­ரிக்க நாடு­களைச் சேர்ந்த அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பல்­க­லைக்­க­ழ­கங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி பல மாண­வர்கள் இப்­போட்­டியில் கலந்து கொண்­டனர்.

அவர்­களால் முன்­வைக்­கப்­பட்ட அனைத்து கண்­டு­பி­டிப்­பு­க­ளையும் பின்­தள்ளி இலங்கை மாண­வர்­களின் கண்­டு­பி­டிப்­பான ெஹரி பொட்டர் தொப்பி முத­லி­டத்தைப் பெற்­றுள்­ளது.

இந்த தொப்பி தொடர்பில் குறித்த பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் விப­ரிக்­கையில், இத் தொப்­பி­யா­னது முழு­வ­து­மாக கணினி தொழில்­நுட்­பத்­துடன் இயக்­கப்­ப­டு­கி­றது. இதனை அணிந்­தி­ருப்­ப­வரை எவ­ரா­வது நெருங்­கினால் அது தொடர்பில் தொப்­பியை அணிந்­தி­ருப்­ப­வ­ருக்கு குறித்த தொப்­பி­யினுள் பொருத்­தப்­பட்­டுள்ள உணரி (சென்ஸர்) மூலம் உணர்த்­தப்­படும்.

ஹெரி பொட்டர் திரைப்படத்தில்…

 

ஆட்­டிசம் (Autism) குறை­பாட்­டினால் பாதிக்­கப்­பட்­டுள்ள சிறு­வர்கள் எப்­போதும் சமூ­கத்­தி­லி­ருந்து தனித்­தி­ருப்­பார்கள். அவர்கள் சக வய­து­டைய சிறு­வர்கள் மற்றும் பெரி­ய­வர்­க­ளுடன் நெருங்கி பழ­காமல் தனித்­தி­ருக்க விரும்­புவர்.

எனவே, இவ்­வா­றான பிள்­ளைகள் ஆட்­டிசம் குறை­பாட்­டுக்கு ஆளா­கி­யுள்­ள­னரா என்ற அறி­கு­றியை இந்தத் தொப்­பியின் மூலம் கண்­டு­கொள்ள முடியும்.

ஆட்­டிசம் குறை­பாட்­டினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிள்­ளைகள் இந்தத் தொப்­பியை அணி­வதால் அவர்­க­ளது மூளைக்கு வழங்­கப்­படும் தூண்டல் மூலம் சக பிள்­ளை­க­ளோடு இயல்­பாக மகிழ்ச்­சி­யுடன் இருப்­ப­தற்கு இதி­லுள்ள கணினி செயற்­பா­டுகள் உதவி செய்­கி­றது என்­றனர்.

இப்­போட்­டியில் வெற்­றி­ பெற்ற இம்­மா­ண­வர்கள், துபா­யி­லி­ருந்து புறப்­பட்டு நேற்­று­முன்­தினம் இரவு 8.40 மணி­ய­ளவில் ஈ.கே. 652 என்ற எமிரேட்ஸ் விமான சேவையின் விமா­னத்தில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்­தனர். இவர்­களை வர­வேற்­ப­தற்­காக அம்­மா­ண­வர்­களின் பெற்­றோர்கள், நண்­பர்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர் கள் என பலரும் வரு­கை­தந்­தி­ருந் ­தனர்.

(சிங்களத்தில் டீ.கே. ஜி.கபில்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!