புர்கினோ பசோ கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 14 பேர் பலி

0 13

ஆபி­ரிக்க நாடான புர்­கினோ பசோவில் கிறிஸ்­தவ தேவா­ல­ய­மொன்றில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 14 பேர் உயி­ரி­ழந்­துள்
­ளனர். நேற்­று­  ஞாயிற்­றுக்­கி­ழமை வழி­பா­டுகள் நடை­பெற்ற வேளையில் இத்­தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.

புர்­கினோ பசோவின் கிழக்­குப்­ப­கு­தியின் நைஜர் நாட்டின் எல்­லைக்கு அரு­கி­லுள்ள ஹண்­டொ­கு­வோரா நகரில் உள்ள தேவா­ல­யத்தில் இத்­தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.

புர்­கினோ பசோ அரசு விடுத்த அறிக்­கை­யொன்றில், ‘ஞாயிற்­றுக்­கி­ழமை தேவா­ல­யத்தில் வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அங்­கி­ருந்­த­வர்­களை நோக்கி இனந்­தெ­ரி­யாத ஆயு­த­பா­ணிகள் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­டனர்.

அதன் பின்னர், தேவா­ல­யத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாது­காப்பு படை­க­ளையும் தாக்­கினர். இதில் 3 அதி­கா­ரிகள் உயி­ரி­ழந்­தனர். இந்த தாக்­கு­த­லுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை’ என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!