பெலோன் டி’ஓர் விருதை மெஸி 6 ஆவது தடவையாக வென்று சாதனை!

Lionel  Messi wins sixth Ballon d'Or as Rapinoe takes women's prize

0 952

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலோன் டி’ஓர் (Ballon d’Or as) விருதை லயனல் மெஸி ஆறாவது தடவையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலோன் டி’ஓர் விருது 1956 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வருட விருது வழங்கல் விழா பிரான்ஸின் பாரிஸ் நகரில் நேற்று இரவு நடைபெற்றது. இவ்விழாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை ஆர்ஜென்டீனா மற்றும் பார்ஸிலோனா கழக வீரர் லயனல் மெஸி ஆறாவது தடவையாக வென்றார். இது புதிய உலக சாதனையாகும்.

இதுவரை எந்த வீரரும் 6 தடவைகள் பெலோன் டி’ஓர் விருதை வென்றதில்லை.போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 தடவைகள் இவ்விருதை வென்றிருந்தார். லுயனல் மெஸி, இதற்குமுன் 2009, 2010, 2011, 2012,  2015,  ஆகிய வருடங்களிலும் பெலோன் டி’ஓர் விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தன் மனைவி அன்டோனெல்லா மற்றும் இரு பிள்ளைகளுடன் இந்நிகழ்வில் லயனல் மெஸி பங்குபற்றினார்.கடந்த வருட வெற்றியாளர் லூகா மொட்றிக்கிடமிருந்து தனக்கான விருதை மெஸி பெற்றுக்கொண்டார். இதேவேளை, இம்முறை சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனைக்கான விருதுக்கு அமெரிக்காவின் மேகன் ரெபினோ (Megan Rapinoe) தெரிவானார். எனினும் அவர் நேரடியாக விருதை பெற்றுக்கொள்ளவில்லை.

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!