மெய்வல்லுநர் போட்டியில் முதல் தங்கத்தை  இலங்கையின் நிலானி  வென்றார் 

Nilani Rathnayake wins first gold athletics at the South Asian Games- SAG2019

0 1,626

(நேபாளத்திலிருந்து எஸ்,ஜே,பிரசாத்)

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் இரண்டாம் நாளான இன்று ஆரம்பமான மெய்வல்லுநர் போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை இலங்கையின் நிலானி ரத்நாயக்க சுவீகரித்தார்.

மெய்வல்லுநர் போட்டிகள் கத்மண்டு தசரத் விளையாட்டரங்கில் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகின.
பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாற்று வீராங்கனையாக பங்குபற்றிய நிலானி, அப் போட்டியை 4 நிமிடங்கள், 34 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

இப் போட்டியில் பங்குபற்றவிருந்த நிமாலி லியனஆராச்சி, நெபாளம் புறப்படுவதற்கு ஒரு தினத்துக்கு முன்னர் வீதி விபத்தில் சிக்கி கொழும்பு தேசிய வைத்தயசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதால் அவருக்குப் பதிலாகவே நிலானி பங்குபற்றினார்.

தங்கத்தை தவறவிட்டார் நடப்பு சம்பியன் ஏஷான்

ஆண்களுக்கான 100 மிற்றர் ஓட்டப் போட்டியில் மூன்று வருடங்களக்கு முன்னர் குவாஹாட்டியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் புதிய சாதனை நிலைநாட்டிய நடப்பு சம்பியனான ஹிமாஷா ஏஷான் இம்முறை தங்கத்தை தவறவிட்டார். இப் போட்டியை 10.50 செக்கன்களில் நிறைவுசெய்த ஏஷான் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். இப் போட்டியில் மாலைதீவுகளின் சய்த் ஹசன் (10.49 செக்.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளியும் வெண்கலமும் கிடைத்தன.

அமாஷா டி சில்வா (11.82 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் லக்ஷிகா சுகன்தி (11.85 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இப் போட்டியில் இந்தியாவின் அர்ச்சனா சுசீந்த் (11.80 செக்.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பெண்களுக்கான உயரம் பாய்தலில் இலங்கையின் துலாஞ்சலி ரணசிங்க 1.69 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பெண்­க­ளுக்­கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்­டியை 35 நிமி­டங்கள் 59.02 செக்­கன்­களில் நிறை­வு­செய்த நிலன்தி ரத்­நா­யக்க வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்­றனர்

இரண்டு அம்ச நிகழ்ச்­சியில்இலங்­கைக்கு தங்கம்

பெண்­க­ளுக்­கான இரண்டு அம்ச நிகழ்ச்­சி­யான டுஅத்லன் போட்­டியை ஒரு மணித்­தி­யாலம், 5 நிமி­டங்கள், 58 செக்­கன்­களில் நிறை­வு­செய்த இலங்­கையின் எரங்கா டில்­ருக்ஷி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­த­துடன் இரேஷா உத­ய­கு­மாரி (1 ம. 09 நி. 09 செக்.) வெண்­கலப் பதக்­கத்தைப் பெற்றார்.

ஆண்­க­ளுக்­கான இரண்டு அம்ச நிகழ்ச்­சியில் லக்மால் பெரேரா (59 நி. 32 செக்) வெண்­கலப் பதக்­கத்தை வென்றார். இரண்டு அம்ச நிகழ்ச்சி என்­பது ஓட்டம், சைக்­கி­ளோட்டம், மீண்டும் ஓட்டம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய மூவம்ச நிகழ்ச்­சியைப் போன்­ற­தாகும்.

வூஸுவில் இலங்­கைக்கு பதக்­கங்கள்

வூஷு போட்­டியில் சான் குவான் தௌலோ நிகழ்ச்­சியில் பெண்கள் பிரிவில் ஜீ. வத்­சலா வெள்­ளிப்­ப­தக்­கத்­தையும் ஆண்கள் பிரிவில் சௌம்ய பிர­பா­கர வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்­றனர்.

பட்­மின்­டனில் 2 வெள்­ளிகள்பட்­மின்டன் அணி நிலை போட்­டி­களில் இலங்­கையின் ஆடவர் அணிக்கும் மகளிர் அணிக்கும் வெள்ளிப் பதக்­கங்கள் கிடைத்­தன. இப் போட்­டிகள் திங்கள் இரவு நடை­பெற்­றது.

கால்­பந்­தாட்­டத்தில் இலங்­கைக்குமாறு­பட்ட பெறு­பே­றுகள்

தெற்­கா­சிய கால்­பந்­தாட்­டத்தில் இலங்கை ஆடவர் அணிக்கும் மகளிர் அணிக்கும் மாறு­பட்ட பெறு­பே­றுகள் கிடைத்­தன.
ஆண்கள் பிரிவில் மாலை­தீ­வு­க­ளுக்கு எதி­ராக திங்­க­ளன்று நடை­பெற்ற போட்­டியை இலங்கை அணி வெற்­றி­தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்­டது.

இப் போட்­டியில் ஆதிக்கம் செலுத்திய மாலை­தீ­வுகள் குறைந்­தது மூன்று கோல்­போடும் இல­கு­வான வாய்ப்­பு­களைத் தவ­ற­விட்­டது. இலங்­கையின் சுந்­த­ரராஜ் நிரேஷ் இரண்­டா­வது மஞ்சள் அட்­டைக்கு இலக்­காகி வெளி­யே­றினார். இப் போட்டி கத்­மண்டு தசரத் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­றது.

காத்­மண்டு கிரித்­திபூர் மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற மக­ளி­ருக்­கான லீக் போட்­டியில் நேபா­ளத்­திடம் 0–1 என்ற கோல் வித்­தி­யா­சத்தில் இலங்கை தோல்வி அடைந்­தது.

கிரிக்­கெட்­டிலும் இலங்­கைக்குமாறு­பட்ட பேறு­பே­றுகள்

ஆட­வ­ருக்­கான தெற்­கா­சிய இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் நேபா­ளத்தை கிரித்­திபூர் மைதா­னத்­தினல் சந்­தித்த 23 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணி 6 விக்­கெட்­களால் வெற்­றி­பெற்­றது.

நேபாளம் 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­களை இழந்து 172 ஓட்­டங்­களைப் பெற்­றது. பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை 19.1 ஓவர்­களில் 4 விக்­கெட்­களை இழந்து 175 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

இதே­வேளை மக­ளி­ருக்­கான இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் இலங்­கைக்கு தோல்­வியே கிட்­டி­யது. பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான போட்­டியில் 7 விக்­கெட்­களால் இலங்கை தோல்வி அடைந்­தது. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 122 ஓட்­டங்­களைப் பெற்­றது.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்­களில் 3 விக்­கெட்­களை மாத்­திரம் இழந்து 126 ஓட்­டங்­களைப் பெற்று 7 விக்­கெட்­களால் வெற்­றி­யீட்­டி­யது.

கால­நி­லையை சாத­க­மாக்கிக் கொண்டுஆதிக்கம் செலுத்தும் நேபாளம்13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் மூன்றாம் நாளான நேற்று மாலை வரையில் நிறைவுபெற்றபோட்டிகளின் பிரகாரம் பதக்கப் பட்டியலில் நேபாளம் அணி முதலிடத்தில் இருக்கின்றது. நேபாளத்தில் நிலவும் கடும் குளிரானது ஏனைய நாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய சவலாக அமைந்துள்ளது.

இந்த குளிரை சாதகமாக்கிக் கொண்டுள்ள நேபாள வீர, வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அதன்படி 19 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 33 பதக்கங்களை நேபாளம் சுவீகரித்து தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!