ஹைதராபாத் பாலியல் வல்லுறவுக் கொலைக் குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும்!

நாடாளுமன்றத்தில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்

0 13

ஹைத­ரா­பாத்தில் கால்­நடை மருத்­துவர் பிரி­யங்கா ரெட்­டியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி கொலை செய்த குற்­ற­வா­ளிகள் பொது­மக்கள் முன் அடித்து கொல்­லப்­பட வேண்டும் என இந்­திய மாநி­லங்­க­ள­வையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவே­ச­மாக கூறினார்.

ஹைத­ரா­பாத்தில் கால்­நடை மருத்­துவர் பிரி­யங்கா ரெட்டி கடந்த புதன்­கி­ழமை கூட்­டாக வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு, எரித்துக் கொல்­லப்­பட்ட சம்­பவம் இந்­திய நாடா­ளு­மன்­றத்தில் இன்று  எதி­ரொ­லித்­தது.  நாடா­ளு­மன்ற மாநி­லங்கள் அவையில் (ராஜ்­ய­சபா) பல்­வேறு கட்சி எம்.பி.க்களும் இந்த பிரச்­சி­னையை எழுப்­பினர். இந்த குற்­றத்தை செய்­த­வர்­களை கடு­மை­யாக தண்­டிக்க வேண்டும் என எம்.பி.க்கள் வலி­யு­றுத்­தினர்.

நடிகர் அமிதாப் பச்­சனின் மனை­வியும் சமாஜ்­வாதி கட்­சியின் எம்.பியு­மான ஜெயா பச்சன் பேசும்­போது;
‘நிர்­பயா தொடங்கி எத்­த­னையோ சம்­ப­வங்கள் நடந்து விட்­டன. ஆனாலும் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்றம் தொடர் கதை­யாகி வரு­கி­றது.

மத்­திய, மாநில அர­சுகள் மக்­க­ளுக்கு என்ன பதில் சொல்­லப்­போ­கின்­றன. ஹைத­ரா­பாத்தில் நடந்த சம்­பவம் பெரும் தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குற்­றத்தில் ஈடு­பட்­ட­வர்­களை பொது­மக்கள் முன்­னி­லையில் அடித்துக் கொல்ல வேண்டும்” என கூறினார்.

அதி­முக எம்.பி. விஜிலா சத்­தி­யானந்த் பேசும்­போது, ‘நாட்டில் பெண்கள் மற்றும் குழந்­தை­க­ளுக்கு பாது­காப்பு இல்­லாத சூழல் உரு­வாகி வரு­கி­றது’ என வேதனை தெரி­வித்தார்.மக்­க­ள­வை­யிலும் (லோக்­சபா) இது­ தொ­டர்­பாக எம்.பி.க்கள் கேள்வி எழுப்­பினர்.

மத்­திய உள்­துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கு பதி­ல­ளிக்­கையில், ‘பாலியல் வல்­லு­றவு போன்ற கொடூர குற்­றங்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். இது­பற்றி நாடா­ளு­மன்­றத்தில் விவா­திக்க அரசு தயாராக உள்ளது’ என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!