Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பெண்கள் வெற்றியடையும்போது சமூகங்களும் எல்லா இடத்திலும் வெற்றியடையும்; பெண்களின் வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தில் அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உரை
2016-10-09 17:04:27

சிறு­மி­களும் பெண்­களும் முழு­மை­யாக வலு­வூட்­டப்­பட்டு அவர்­களின் அப­ரி­மி­த­மான முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்­து­கொண்டு அவர்­க­ளது கன­வு­களை நன­வாக்கி வாழ்ந்தால் மட்­டுமே எமது உலகம் அதன் முழு­மை­யான முக்­கி­யத்­து­வத்தை அடை­ய­மு­டியும் என்ற எனது உறு­தி­யான நம்­பிக்­கையை வலி­யு­றுத்த விரும்­பு­கின்றேன்.

 

 

பெண்கள் வெற்­றி­ய­டை­யும்­போது சமூ­கங்­களும் எல்லா இடத்­திலும் வெற்­றி­ய­டையும் என இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் கூறினார். அண்­மையில் நடை­பெற்ற, பெண்­களின் வர்த்­தக மற்றும் தொழில் சம்­மே­ள­னத்தின் கூட்­டத்தில் அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

 

தூதுவர் அதுல் கேஷாப் மேலும் உரை­யாற்­று­கையில் கூறி­ய­தா­வது: குறிப்­பி­டத்­தக்க பெண் தலை­வர்­களும் உயர் தொழில் திற­மை­வாய்ந்த பெண்­களும் நிறைந்த இக் ­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்ற அழைத்­த­தை­யிட்டு பெரு­மை­ய­டை­கின்றேன்.

 

லங்­கையில் பெண்­க­ளுக்­கான தடை­களை ஒவ்­வொரு நாளும் நீங்கள் உடைத்­துக்­கொண்டு எதிர்­கால இளம் தலை­வர்­க­ளுக்கு நல்ல நம்­ப­க­மான ஆலோ­ச­க­ராக திகழ்­கி­றீர்கள். மிகப்­ பல பிரி­வு­க­ளைக்­கொண்ட நாட்டை வலி­மை­மிக்­க­தாக ஆக்­கு­வ­தற்கு நீங்கள் உதவி செய்­கி­றீர்கள்.

 

எனது அன்­பிற்கும் மரி­யா­தைக்கும் உரிய நண்பர் பைசர் முஸ்­த­பாவை பார்­வை­
யா­ளர்கள் மத்­தியில் பார்க்­கிறேன். பூர­ணத்­துவம் அடைந்த பெண் தலை­வர்­களை மணம்­மு­டித்­த­வர்கள் என்­ற­வ­கையில் ஆண்கள் பாக்­கி­ய­வான்­களே.

 

இலங்­கையின் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்­கான புதிய கத­வு­களைத் திறந்த முன்­னோடிப் பெண்­களின் நீண்ட சரித்­தி­ரத்தை இலங்கை கொண்­டுள்­ளது. சுனா­மியின் கோர அழி­வி­லி­ருந்து இலங்­கையை பாது­காப்­ப­தற்­காக தனது உயி­ரையே தியாகம் செய்யத் துணிந்த அரசி விகா­ர­மா­தே­வியின் சரித்­தி­ரத்தை மகா­வம்சம் குறிப்­பி­டு­வதை நினை­வு­கூ­ரு­கின்றேன்.

 

அல்­லது இலங்­கையின் முதல் பெண் பிர­த­ம­ரான திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க, அத்­துடன் இலங்­கையின் முத­லா­வது பெண் ஜனா­தி­ப­தி­யான அவ­ரது மகள் திரு­மதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஆகியோர்.

 

அத்­துடன் 2000 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஒலிம்பிக் போட்­டி­களில் பங்­கேற்று இலங்­கைக்­கான இரண்­டா­வது ஒலிம்பிக் பதக்­கத்தைக் கொண்­டு­வந்த சுசந்­திகா ஜய­சிங்க உள்ளார். அத்­துடன் இம­ய­ம­லையின் உச்­சியை தொட்ட முத­லா­வது இலங்­கை­ய­ரான ஜயந்தி குரு உத்­தும்­பொல இன்று எங்­க­ளுடன் இந்த கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருப்­பதன் மூலம் எமக்­கெல்லாம் கௌர­வ­ம­ளித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

 

பால்­நிலை சமத்­துவம் மற்றும் பெண்­களின் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச உரை­யா­டல்­களில் மாற்­றங்­களைக் கொண்­டு­வந்த ஆர்­வமும் தைரி­ய­மும்­மிக்க இலங்கைப் பெண்­களின் நீண்ட பெயர்­பட்­டி­யலில் இவர்கள் மிகச் சிலரே.

 

அதே நேரம், ஐக்­கிய அமெ­ரிக்க பெண்­களும் கண்­ணாடிக் கூரை­களை உடைத்­துக்­கொண்டு தலை­வர்­க­ளாக அவர்­களின் உரிய இடத்தைப் பெற்­றுக்­கொள்­கின்­றனர்.

 

அந்த பட்­டி­யலில் விண்­வெ­ளியில் முதன்­மு­தலில் பய­ணம்­செய்த அமெ­ரிக்க பெண் விண்­வெளிப் பிர­யா­ணி­யான செலீ ரைனட், சிவில்­ச­மூக உரிமை செயற்­பாட்­டாளர் ரோசா பார்க்கர், பேஸ்புக் மற்றும் பால்­நிலை செயற்­பாட்­டாளர் சேர்யில் செண்ட்பேர்க்  மற்றும் டென்னிஸ் நட்­சத்­தி­ர­மான செரினா வில்­லியம் ஆகியோர் அடங்­கு­வார்கள்.

 

எதிர்­வரும் நவம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பா­ள­ராக மிகவும் பிர­சித்­தி­பெற்ற அர­சியல் கட்­சி­யினால் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள முதல் பெண் ஜனா­தி­பதி வேட்­பாளர் உள்ளார். 1960 ஆம் ஆண்டு இலங்கை அடைந்த வெற்­றி­யைப் போல் எமது வாக்­கா­ளர்­களும் செயற்­ப­டு­வார்கள் என்­பதை அவர் நன்கு அறிவார்.

 

இலங்­கையில் வாழ்­கின்ற பெண்­களின் இப்­ப­டி­யான உயர்ந்த வெற்­றி­க­ளுக்கு மேலாக சமூ­கத்தில் பெண்­களின் சம­மான பங்­க­ளிப்பை உறு­தி­செய்­வ­தன்­பொ­ருட்டு இன்னும் அதி­க­மாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

 

இலங்­கையின் சனத்­தொ­கையில் பெண்­களின் எண்­ணிக்கை அரை­வா­சிக்­குமேல் இருந்­த­போ­திலும் நாடா­ளு­மன்றத்தில் பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் 6  வீதத்­திற்கும் குறை­வா­கவே உள்­ளது. கல்­வியைப் பெற்­றுக்­கொள்ள போதிய வச­தி­யின்மை, கடன் பெற்­றுக்­கொள்­வ­தற்கு கட்­டுப்­பா­டுகள், பால்­நிலை அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றை­கள், ஆழ­மா­கப்­ப­திந்த பார­பட்­சங்கள் போன்­ற­வற்றின் கார­ண­மாக நாடு­மு­ழு­வ­திலும் வாழ்­கின்ற பெண்கள் தொழிற்­செ­ய­ல­ணியில் தங்­க­ளது முழு­மை­யான பங்­க­ளிப்­பிற்­காக அனே­க­மான தடை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

 

அர­சி­யலில் பெண்­க­ளுக்­கான வாய்ப்­புக்கள் மிகவும் குறை­வா­கவே உள்­ளன. சர்­வ­தேச தொழி­லாளர் சம்­மே­ளனம் மற்றும் ஆசிய அபி­வி­ருத்தி வங்கி ஆகி­ய­வற்றின் புள்­ளி­வி­ப­ரப்­படி பெண்­க­ளுக்­கான தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தி­லுள்ள கட்­டுப்
­பா­டுகள் கார­ண­மாக முழு ஆசிய பசுபிக் பிராந்­தி­யமும் 42 - 47 பில்­லியன் அமெ­ரிக்க டொலரை வரு­டாந்தம் இழக்­கின்­றது.

 

ஐக்­கிய அமெ­ரிக்­கா­வி­லும்­கூட, பிர­ச­வ­கால விடு­மு­றைக்­கான வேத­னத்தைப் பெற்­றுக்­கொள்லும் சட்ட உரிமை பெண்­க­ளுக்கு இன்னும் கிடை­யாது, அத்­துடன் அனே­க­மான பெண்கள் தங்­க­ளது சக ஆண் தொழி­லா­ளர்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது அவர்­க­ளுக்கு சம­மான வேலைக்கு சம­மான வேத­னத்தை இன்னும் சம்­பா­திப்­ப­தில்லை.

 

உலகம் முழு­வ­தி­லு­முள்ள பால்­நிலை தொடர்­பான பிரி­வி­னை­களை ஒழிப்­ப­தற்கு நாம் இணைந்து செயற்­ப­ட­மு­டியும். ஜனா­தி­பதி ஒபாமா கூறு­வ­துபோல், “எமக்கு முன்னர் வந்த பெண்­களின் செயற்­பா­டு­களை நாம் தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்டும்.

 

இந்தப் பய­ணத்தில் ஐக்­கிய அமெ­ரிக்கா இலங்­கையின் பங்­கா­ளி­யா­கவும் நண்­ப­னா­கவும் நீண்­ட­கா­ல­மாக இருந்­து­ வந்­துள்­ளது. தொடர்ந்தும் இருக்கும். பெண்­களின் உரி­மைகள் மற்றும் பால்­நிலை சமத்­துவம் என்னும் விட­யங்­களில் எமக்­குள்ள உயர்­மட்ட கடப்­பாட்­டினை வெளிப்­ப­டுத்தும் வகையில் உல­க­ளா­விய பெண்­களின் விட­யங்­க­ளுக்­கான விசே­ட­தூ­துவர் கெத்தி ருசில் 2015ம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் இலங்­கைக்கு வரு­கை­ தந்­தி­ருந்தார்.  

 

“பால்­நிலை சமத்­து­வத்தை முன்­னெ­டுப்­பது ஒவ்­வொ­ரு­வ­ரதும் விசேட அக்­க­றையில் தங்­கி­யுள்­ளது. பெண்கள் சிறப்­ப­டை­யும்­போது, சமூகம், வியா­பாரம், மற்றும் நாடு­களும் அதேபோல் சிறப்­ப­டை­கின்­றன என ஐக்­கிய அமெ­ரிக்கா நம்­பு­கி­றது” என்று விசேட தூதுவர் தமது இலங்கை விஜ­யத்­தின்­போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

 

பல தசாப்­தங்­க­ளாக இலங்­கையின் பெண்­க­ளுக்கும் சிறு­மி­க­ளுக்கும் அவர்­க­ளது கல்­வியைப்பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வச­தி­க­ளையும் கைத்­தொழில் திற­மை­க­ளையும் விருத்­தி­செய்­வ­தி­லி­ருந்து, சட்ட உரி­மைகள், பாது­காப்பு மற்றும் அர­சி­யலில் பங்­கேற்பு என்னும் விட­யங்­க­ளுக்­கானபரப்­பு­றை­கள்­வரை யூ.எஸ்.எயிட் மூல­மாக தூத­ரகம் உத­வி­வந்­துள்­ளது.

 

விசே­ட­மாக, திரு­ம­ண­மா­காதபெண்கள், யுத்­தத்தால் கண­வனை இழந்தோர் மற்றும் விசேட தேவை­க­ளை­யு­டைய பெண்கள்என்­போ­ருக்­கான தொழில்­களை உரு­வாக்கி அவர்­களின் வரு­வாயைப் பெருக்­கி­யுள்ளோம். வியா­பார திட்ட அபி­வி­ருத்திப் பயிற்­சி­களை வழங்­குதல், நிதி வழங்கும் சந்­தர்ப்­பங்­களைஇனங்­கா­ணலும் கொள்­முதல் செய்­வோ­ரு­டனும் சந்­தைப்­ப­டுத்­த­லையும் தொடர்­பு­ப­டுத்­து­வ­தன் ­மூலம் பெண்­களின் சிறு­தொ­ழில்­மு­யற்­சியை விருத்தி செய்­வ­தற்­கா­கவும் நாம்  செயற்­ப­டு­கின்றோம். இலங்கை பெண்கள் சிறு­தொ­ழில்­மு­யற்­சியில் கொண்­டுள்ள ஆர்வம்  மீண்­டெழும் தன்மை என்­ப­வற்றால் நான் ஆச்­சர்­ய­ம­டைந்­துள்­ள­துடன் கவர்ந்­தி­ழுக்­கப்­பட்­டுள்ளேன்.

 

இந்த நாடு­மு­ழு­வதும் தங்­க­ளது வாழ்க்­கை­யையும் சமு­தா­யத்­தையும்  பரி­மாற்­ற­ம­டை­யச்­செய்­வ­தற்கும் ஏழ்­மையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கா­கவும் பெண்கள் ஒன்­றி­ணைந்து உழைக்­கின்­றனர். அதற்கு ஒரு உதா­ரணம் ஏ 9 வீதியில் அமைந்­துள்ள “வன்­னியின் சுவை” (Taste of Vanni) என்னும் ஓய்­வுக்­காக வாக­னங்கள் நிறுத்­து­மி­ட­மாகும்.

 

அது ஒரு பெண்­களின்  கூட்­டு­றவு அமைப்பாள் ஆரம்­பிக்­கப்­பட்டு உணவு வகை­களும் பானங்­களும்  விற்­ப­ணை­செய்­வ­துடன் உள்ளூர் பெண்­களின் உற்­பத்திப் பொருட்
­க­ளையும் அங்கு விற்­பனை செய்­கின்­றார்கள். இக்­கூட்­டு­றவு நிலை­யத்­திற்கு அர­சாங்­கத்­து­டனும் ஏனைய நிதி நிறு­வ­னங்­க­ளு­டனும் இணைந்து யூ.எஸ்.எயிட் பங்­கா­ள­ராக உத­வி­ யுள்­ளது.

 

உள்­ளூ­ராட்சி அதி­கார சபை­களில் செல் ­வாக்கு செலுத்தி தமது சமூ­கத்­திற்கு அத்­தி­யா­வ­சி­யத் ­தே­வை­களைப் பெற்­றுக்­கொ­டுப்­பதை மையப்­ப­டத்தி சமூ­கத்­ தி­லி­ருந்து உரு­வாகும் பெண் தலை­வர்­க­ளுக்கு உத­வு­வதில் அவ­தானம் செலுத்தும் நிறு­வ­னங்­க­ளுக்கும் எமது உத­வி­களை வழங்கி வரு­கின்றோம்.

 

இவ்­வாண்டு சர்­வ­தேச விருந்­தினர் தலை­மைத்­துவ செயற் திட்­டத்தில் பங்­கேற்­ப­தற்­காக 14 பெண்­களை தெரி­வு­செய்­துள்ளோம். தெழில்­தி­ற­மை­கொண்ட முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வர்­களை பரி­மாற்­றிக்­கொள்ளும் அர­சாங்க திணைக்­களம் அது சமூ­கத்தின் மத்­தியில் உரு­வா­கி­வரும் தலை­வர்­களை இலக்­காகக் கொண்­டது.

 

இப் ­பெண்கள் சந்­தித்­துக்­கொண்­டனர். அத்­துடன்  உல­கத்­தி­லுள்ள வேறு பெண் தவைர்­க­ளையும் தொடர்ந்து சந்­திப்­பார்கள். சிறு­மி­களும் பெண்­களும் முழு­மை­யாக வலு­வூட்­டப்­பட்டு அவர்­களின் அப­ரி­மி­த­மான முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்­து­கொண்டு அவர்­க­ளது கன­வு­களை நன­வாக்கி வாழ்ந்தால் மட்­டுமே எமது உலகம் அதன் முழு­மை­யான முக்­கி­யத்­து­வத்தை அடை­ய­மு­டியும் என்ற எனது உறு­தி­யான நம்­பிக்­கையை வலி­யு­றுத்த விரும்­பு­கின்றேன்.

 

பெண்கள் வெற்­றி­ய­டை­யும்­போது சமூ­கங்­களும் எல்லா இடத்­திலும் வெற்­றி­ய­டையும். சக­ல­ருக்கும் சம­ உ­ரி­மை­யையும் சம சந்தர்ப்பத்தையும் உறுதி செய்யும் பொருட்டு உங்களுடனும் உங்கள் அரசாங்கத்துடனும் ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் செயற் படும் என்பதை என்னால் உறுதியுடன் கூறமுடியும்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.